உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வார தொடக்கத்தில் தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.400 குறைவு

வார தொடக்கத்தில் தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.400 குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (அக் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.91.600க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால் கடந்த ஒரு வாரமாக, நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை), தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 11,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (அக் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.91.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11450க்கு விற்பனை ஆகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.170க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
அக் 27, 2025 17:11

தங்கம் விலை Todays price for 24-carat gold in the USA is approximately $130 to $132 per gram அதாவது ரூ 11,471.2 - 11,779.68 US $ 1=ரூ 88.24 இன்றைய விலை ஆனால் இந்தியாவில் ரூ 12,579/கிராம் ?????


moorthy
அக் 27, 2025 13:40

தங்கம் விலை சரிந்தது


murugan
அக் 27, 2025 13:35

தங்கம் விலை குறைய வேண்டும்


சமீபத்திய செய்தி