உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது.சர்வதேச நிலவரங்களால் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, தமிழகத்தில் கடந்த வாரத்தில் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 09) காலை தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 66,320 ரூபாய்க்கு விற்பனையானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=owuchmzp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதியம் திடீரென சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 67,280 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று (ஏப்ரல் 10) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745க்கு விற்பனை ஆகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R S BALA
ஏப் 11, 2025 19:12

சவரனுக்கு ரூ 10000 வரை மிக விரைவில் விலை இறங்க வாய்ப்புள்ளது..


RAJ
ஏப் 11, 2025 18:33

நாளைக்கு ... தங்கம் விலை சரிந்தது.. 50 ரூவா குறைஞ்சுதுன்னு போடுவாங்க ..


ديفيد رافائيل
ஏப் 11, 2025 10:19

600 rupees குறைக்கும் போதே எனக்கு தெரியும் இந்த மாதிரி தான் பண்ணுவானுங்கன்னு


Thetamilan
ஏப் 11, 2025 09:56

உலக ஜாம்பவான் என்றுகூறிக் கொள்ளும் அரசு இதில் என்ன செய்தது. வேடிக்கை பார்க்கிறதா ?


Rajan A
ஏப் 11, 2025 14:42

சட்ட தீர்மானம் போட்டு கோர்ட்க்கு போய் விலையை குறைக்க வேண்டியதுதானே.


அப்பாவி
ஏப் 11, 2025 09:53

இதுக்கு காரணம் டாலரின் மதிப்பு நேற்று சரிந்ததே. கவலை வாணாம். பீதி வாணாம்.


முக்கிய வீடியோ