வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நெஞ்சம் பதறுகிறது
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7,595க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்றம், இறக்கங்களை கண்டு வருகிறது. சென்னையில் நேற்று (ஜன.,28) தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.60,080க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,29) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7,595க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நெஞ்சம் பதறுகிறது