உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை

தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று (அக் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கு விற்பனை ஆகிறது.நம் நாட்டில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டியது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 09) தங்கம் கிராம் 11,425 ரூபாய்க்கும், சவரன் 91,400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம் 177 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (அக் 10) காலை தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து, 11,260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,320 ரூபாய் சரிவடைந்து, 90,080 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 11,340 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, 90,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து, 184 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (அக் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

புதிய உச்சம்

சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.187 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோ ரூ.3 ஆயிரம் உயர்ந்து ரூ.1,87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை