உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் சரிந்தது

காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் சரிந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (அக் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்த நிலையில் இன்று மாலை ரூ.1.440 குறைந்தது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் சவரனுக்கு, 2,000 ரூபாய் சரிவடைந்து, 95,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 13 ரூபாய் குறைந்து, 190 ரூபாய்க்கு விற்பனையானது. அன்றைய தினம் மதியம் (அக்டோபர் 18) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.95,360க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.11,920க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று (அக் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.260 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,180க்கு விற்பனை ஆகிறது. இன்று மாலை சவரனுக்கு ரூ.1,440 சரிவை சந்தித்த தங்கம் ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.12, ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.188 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதிகரிக்கும்!

இது தொடர்பாக, நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு சில நாட்களில், தங்கம் விலை ரூ. ஒரு லட்சத்தை தாண்டி விடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
அக் 21, 2025 19:08

பிரிக்ஸ் நாடுகளிடையே தங்க அடிப்படையில் யுவானை வெளியிட சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் தனியார் சீன நிறுவனங்கள் ஐந்தாயிரம் டன் தங்கத்தை இந்தாண்டு வாங்கி உள்ளார்கள். விரைவில் இன்னும் தங்கம் வாங்குவார்கள். பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா உட்பட பலநாட்டு ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன . அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரண்டு லட்சம் ஆகும். டாலர் குப்பைத்தொட்டிக்கு செல்லும்.


Vijay D Ratnam
அக் 21, 2025 16:25

பெண்களே, இனி தாலியில் கூட தங்கம் வைத்துக்கொண்டு வெளியே நடமாடாதீர்கள். மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சள் போதும். இந்த தங்கத்தில் பத்து பவுனில் தாலிச்சரடு, நெக்லஸ், முழங்கை வரைக்கும் வளையல்கள் போடுவதாக இருந்தால் பவுன்சர்ஸ் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். பெண் குழந்தைகள் காதில் கால் பவுனுக்கு கூட தோடு போடாதீர்கள். காதோடு போயிடும். உங்களுக்குத்தான் அது தோடு, காது. அறுத்துட்டு போற நாய்க்கு அது ஏழெட்டு குவாட்டர் அம்புட்டுதான்.


சந்திரசேகர்
அக் 21, 2025 13:04

மக்களே எப்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைய தொடங்குறதோ அப்போது உங்களிடம் உள்ள நகைகளை விற்று பணமாக்கி பேங்கில் வைத்து கொண்டு மீண்டும் தங்கம் ஒரு நிலையான குறைந்த இடத்திற்கு வரும்போது திரும்ப வாங்கி கொள்ளுங்கள்


duruvasar
அக் 21, 2025 11:29

தாய்குலங்களே மூக்கு கழுத்தில் 1 கிராம் அளவு தங்க நகைகள் இருந்தால் கூட வெளியில் அணிந்து செல்லாதீர்கள். உயிருக்கே ஆபத்தாகிவிடும். . சாக்கிரதை


Abdul Rahim
அக் 21, 2025 11:18

நேற்றுதான் குறைந்தது போல தெரிந்தது மீண்டும் ஏறிவிட்டது ,இந்த நேரத்தில் 10 பவுன் வைத்திருக்கும் அப்பத்தா கூட லட்சாதிபதி தான்....


புதிய வீடியோ