உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் இறங்கியது கொஞ்சம்!

தங்கம் இறங்கியது கொஞ்சம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 3 நாட்களுக்கு பின்னர் சற்றே மாறி உள்ளது.தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தில் விலையில் புதிய மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன் இல்லாத அளவு, தங்கத்தின் விலை ஏறியதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பண்டிகை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்ததாக தங்க நகை வியாபாரிகள் கூறினர்.இந் நிலையில் தீபாவளி முடிந்துவிட்ட நிலையில் 3 நாட்கள் கழித்து தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. நவம்பர் 2ம் தேதிக்கு பின்னர் தற்போது தான் விலை மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் நகை ரூ.58,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,355 ஆக இருக்கிறது.கடந்த 10 நாட்களாக (அக்.26 முதல் நவம்.4) இருந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலையை இப்போது பார்க்கலாம்: அக்.26 - ரூ.58,880அக்.27 - ரூ.58,880அக்.28 - ரூ.58,520 அக்.29 - ரூ.59,000அக்.30 - ரூ.59,520 அக்.31 - ரூ.59,640 நவ.1 - ரூ.59,080நவ.2 - ரூ.58,960 நவ.3 - ரூ.58, 960நவ.4 - ரூ.58,960


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை