வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தங்கம் விலை சவரனுக்கு ரூ 36,000 சரிந்தால் தான் அது சரிவு என்று கொள்ளப்படும் ரூ 360 சரிவு இன்று நாளை ரூ 720 ஏற்றம் என்று வரும் தினம் தினம் நடக்கும் கோல்மால் தானே இது
தங்கம் விலை குறைய வேண்டும்
சென்னை: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (மே 17) தங்கம் கிராம், 8,720 ரூபாய்க்கும், சவரன், 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (மே 19) தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 8,755 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 70,040 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று ரூ.360 சரிந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ 36,000 சரிந்தால் தான் அது சரிவு என்று கொள்ளப்படும் ரூ 360 சரிவு இன்று நாளை ரூ 720 ஏற்றம் என்று வரும் தினம் தினம் நடக்கும் கோல்மால் தானே இது
தங்கம் விலை குறைய வேண்டும்