தங்கம் சவரனுக்கு ரூ.1,960 உயர்வு வெள்ளி கிராம் ரூ.206ஐ எட்டியது
சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,960 ரூபாய் அதிகரித்து, 94,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராம் விலையும், இதுவரை இல்லாத அளவாக, 206 ரூபாயாக உயர்ந்துள்ளது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 11,580 ரூபாய்க்கும், சவரன், 92,640 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 197 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உச்சம். நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 245 ரூபாய் உயர்ந்து, 11,825 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,960 ரூபாய் அதிகரித்து, 94,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராம், 9 ரூபாய் உயர்ந்து, 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், 1ம் தேதி தங்கம் சவரன், 87,600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரு வாரங்களில் மட்டும் சவரனுக்கு எப்போதும் இல்லாத வகையில், 7,000 ரூபாய் அதிகரித்துள்ளது.