உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போனது சிறுத்தை; வந்தது பூனைக்குட்டி: எச்.ராஜா கிண்டல்

போனது சிறுத்தை; வந்தது பூனைக்குட்டி: எச்.ராஜா கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'முதல்வர் ஸ்டாலின் சந்திக்க திருமாவளவன் போகும் போது சிறுத்தையாக போனார். வெளியே பூனைக்குட்டியாக வந்தார்' என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.மதுரையில், நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: மதுக்கடைகளை திறப்பது மாநில அரசு, மூடுவது மத்திய அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர். பீஹாரில் நிதீஷ்குமார் மதுவிலக்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்திலும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டியது தான? மதுக்கடையை திறந்தவர்களிடம் தான் சாவி உள்ளது, அவர்கள் தான் மூட வேண்டும். மதுக்கடையை திறந்தவர்கள் முதலில் மூடுமாறு சீமான் நல்ல கேள்வி கேட்டுள்ளார்.

அறைகூவல்

மக்களை திசை திருப்ப, மத்திய அரசிற்கு எதிராக மடைமாற்றுவதற்காக இது ஒரு கூட்டு சதி. முதல்வர் ஸ்டாலின் சந்திக்க திருமாவளவன் போகும் போது சிறுத்தையாக போனார். வெளியே பூனைக்குட்டியாக வந்தார். உள்ளே பேரமா? மிரட்டலா? என்ன நடந்தது? மாநாட்டிற்கு அ.தி.மு.க., உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாக திருமாவளவன் கூறினார். இதன் பிறகு நாங்கள் அறைகூவல் விடுகிறோம் என்றார்.

தி.மு.க., ஓட்டுகள்

பட்டியல் சமூகத்திற்கு கூட திருமாவளவன் லீடர் இல்லை. மகாத்மா காந்தியின் பெயரை களங்கப்படுத்துவதற்கு நடந்த மாநாடு என்றால் இதுதான். விஜய் தி.மு.க.,வின் பி டீமா என்பது பற்றி பேசப் போவதில்லை. விஜய் வருகையால் தி.மு.க., ஓட்டுகள் தான் பிரிக்கப்படப் போகிறது. எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பா.ஜ., கூட்டணியில் நேர்மை உள்ளது. தி.முக., கூட்டணியில் நேர்மை இல்லை. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 04, 2024 13:51

First state government has to implement prohibition. Then state government has to analysis the loss of revenue after adjusting revenue received from native sources like increasing milk and milk products, Cocoa products etc. After that State Government with relevant data find out the exact loss and submit to centre government Not Ondira Arasu for compensation. VCK is none other than a wing of Admk or DMK according to situation and income.


muthu
அக் 04, 2024 09:56

BJP leader know very well that if prohibition implemented in TN , there is a loss of revenue to TN . Let centre makeup the loss to all states and bring prohibition to all states .. That is the stand taken by VCK .


K.n. Dhasarathan
அக் 03, 2024 22:25

எச் ராஜா தன்னை பற்றி சொல்கிறார், போன சிறுத்தை லண்டனில் தூங்குகிறது, பொறுப்பு எடுத்துக்கொண்ட பூனைக்குட்டி ஹச் . ராஜா போடும் மியா மியா தான் இது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 04, 2024 13:54

சிறுத்தை பூனை புலி சிங்கம் எதுவாக இருந்தாலும் பதுங்குவது பாய்வதற்கு கூட இருக்கலாமே.


பேசும் தமிழன்
அக் 03, 2024 21:05

தேவையானதை வாங்கி கொண்டு ....பூனையாக மாறி விட்டார் ....எல்லாம் ....காசு ...துட்டு ...மணி ...மணி.


Duruvesan
அக் 03, 2024 20:00

பாஸ் அவரோ இல்லை எந்த சிறுத்தை யோ சரக்கு இல்லாம இருக்க மாட்டானுங்க இதுக்கா இவ்வளவு பீத்தல்


தஞ்சை மன்னர்
அக் 03, 2024 19:58

அவரை விடுங்க பாஸ் ம ன நலம் பாதிக்கப்பட்டவரே நான் சொல்லல உங்க பாஷயில் கூந்தல் கோர்ட் சொன்னது அவராவது அப்போ அப்போ ஆனால் ஆனால் நீங்க அடி மண்டைக்காடு சம்பவம் உதை வாங்கி நீங்க காத்து வந்த பதவியை உங்களுக்கு கவர்னர் பதவி தருகிறோம் என்று வேரோடி பிடுங்கிய கட்சியில் இப்போ எந்த இடத்தில இருக்கியா அதை சொல்லுங்க இப்போ காலை சுற்றும் பூனை யாரு என்று தெரிந்து விடும்


தாமரை மலர்கிறது
அக் 03, 2024 19:13

சிறுத்தை சிறுத்து, பூனையாக மாறிய குருமா


Pandi Muni
அக் 03, 2024 18:50

அது எப்போவுமே பூனைதான். தெலுங்கு பூனை. தமிழனை சிறுத்தைன்னு சொல்லி ஏமாத்திகிட்டு திரியறானுங்க


raja
அக் 03, 2024 18:44

இந்த குருமா மொதல்ல தாழ்தப்பட்ட உறவுகளுக்கு நடந்த கேவலத்தை, வேங்கை வயல் அக்கிரமத்தை பற்றி பேச துப்பில்லை....


saiprakash
அக் 03, 2024 17:58

வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாத எச்ச ராஜா பேசுகிறார்


சமீபத்திய செய்தி