உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்

சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்

சென்னை: ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்த்தேகத்தை வந்தடைந்தது. கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் ரெட் ஹில்ஸ் ஏரியில் சேமித்து வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையின் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர், திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னையை வந்தடையும்.சென்னை மக்களுக்கு கோடையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தில், தண்ணீர் வழங்கும்படி ஆந்திராவிடம் தமிழக நீர்வளத்துறை சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. அதன்படி கண்டலேறு அணையில் இருந்து, மார்ச் 24ம் தேதி கிருஷ்ணா ஆற்றில், முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கம் வர தொடங்கியுள்ளது. தற்போது வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இது 500 கன அடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.இந்த தண்ணீர் ரெட் ஹில்ஸ் ஏரியில் சேமித்து வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை - கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களில் 74% தண்ணீர் உள்ளது. கோடை வெயில் அதிகரித்து தண்ணீர் ஆவியாகும் பட்சத்தில், கிருஷ்ணா நதிநீர் உதவிகரமாக இருக்கும்.இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் உள்ள கே.பி., கால்வாய் நுழைவு பகுதியில் தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இதில் 350 கனஅடி தண்ணீர் ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து சென்னை முழுவதும் விநியோகிக்கப்படும். நகரத்திற்கு இப்போது ஒரு நாளைக்கு 109 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது, இது கடந்த மார்ச் மாதத்தை விட சற்று அதிகம். இவ்வாறு அவர் கூறினார். கிருஷ்ணா நதி நீர் வர தொடங்கியுள்ள நிலையில், கோடையில் பற்றாக்குறை இன்றி குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மார் 30, 2025 13:19

ஆனால் சென்னை மக்கள் அதிகம் குடிப்பது டாஸ்மாக் குடிநீர்.


xyzabc
மார் 30, 2025 12:25

விரைவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். எதிர் பாருங்கள்


Amar Akbar Antony
மார் 30, 2025 11:36

இந்தியாவின் இரு மாநில நடிகர்கள் முதல்வரான காலத்தில் துவக்கப்பட்ட திட்டம். அந்த மாதிரி எல்லாம் நடிகர்கள் வரமுடியாது இனி. இன பேர்வழிக்ஸ் உள்ள திராவிட ஆட்சியில் நல்ல பல காரியங்கள் நடந்தன. அதற்காகவே எம் ஜி ஆர் சிறந்த திராவிட முதல்வர் என்பேன்.


c.k.sundar rao
மார் 30, 2025 10:28

Citizens of Chennai should be greatful and thankful to 'MGR' for his long term vision of quenching people's thrist.


skanda kumar
மார் 30, 2025 10:15

அது தெலுங்கு தண்ணீர். டாஸ்மாக் தமிழ் தண்ணீரில்ல. ஓகே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை