உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை

ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை

சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் சில்லரை கடைகளில், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை நாட்களில், 200 கோடி ரூபாய்க் கும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மது கடைகளுக்கு விடுமுறை. இதனால், அதற்கு முந்தைய நாளான ஆயுத பூஜை அன்று, மது கடைகளை திறந்தது முதல் மது வகைகளை வாங்க, வாடிக்கையா ளர்கள் படையெடுத்தனர். கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால், அன்று ஒரே நாளில், 240 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 04, 2025 02:05

சரக்கு பாட்டில்களில் குடி குடியை கெடுக்கும் என்று எழுதி இருக்கும். ஆனால் எழுதவேண்டியது "குடி, கருணாநிதி குடும்பத்தை வளர்க்கும் என்கிற வாசகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை