உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரூ.151 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

 ரூ.151 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

சென்னை: தேர்தல் பறக்கும் படை சோதனையில், 151 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: பணம், மதுபானம் போதைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கண்காணிக்க, மாநிலம் முழுதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க குழுக்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன. பறக்கும் படை வாயிலாக, நேற்று வரை 30.53 கோடி ரூபாய் ரொக்கம்; 72 லட்சம் ரூபாய் மதுபானம்; 6.47 கோடி ரூபாய் மதுபானம்; 92 கோடி ரூபாய் தங்கம் மற்றும் வெள்ளி; 22.1 கோடி ரூபாய் இலவச பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 151 கோடி ரூபாய். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை