உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவம்பர் 1ல் விடுமுறை அரசு ஊழியர்கள் கோரிக்கை

நவம்பர் 1ல் விடுமுறை அரசு ஊழியர்கள் கோரிக்கை

சென்னை:'தீபாவளி தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்கு வசதியாக, நவம்பர் 1ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்:தீபாவளி பண்டிகைக்கு வரும் 31ம் தேதி வியாழக்கிழமை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி முடிந்த மறுநாள் 1ம் தேதி மட்டும் அரசு வேலை நாளாக உள்ளது.நவ., 2 மற்றும் 3ம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை. எனவே, 1ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால், தீபாவளி பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடி விட்டு, சொந்த ஊரில் இரண்டு நாட்கள் குடும்பத்துடன் தங்க வசதியாக இருக்கும். பண்டிகை முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் செல்ல, பஸ் வசதியும் எளிதாக கிடைக்கும். எனவே, நவம்பர் 1ம் தேதியை அரசு விடுமுறை நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி