உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ காப்பீடு திட்ட காலம் நீட்டிப்பு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தி

மருத்துவ காப்பீடு திட்ட காலம் நீட்டிப்பு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ செலவு தொகை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், காப்பீடு திட்டத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் 2021 ஜூலை 1 ல் இருந்து 4 ஆண்டு ஒப்பந்தம் அமல்படுத்தினர். அரசு ஊழியர், ஆசிரியரிடம் மாதம் ரூ.300, ஓய்வூதியரிடம் ரூ.450 பிரீமிய தொகை பிடித்தம் செய்கின்றனர். இத்திட்டம் மூலம் பட்டியலில் உள்ள முக்கிய மருத்துவமனையில் சிகிச்சை பெருவோருக்கான செலவு தொகை காப்பீடு நிறுவனம் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இத்திட்டத்திற்கான ஒப்பந்த காலம் 2021 முதல் 2025 ஜூன் 30ல் முடிவடைகிறது. இந்நிலையில் ஒப்பந்த காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு (2026 ஜூன் 30 வரை) நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ செலவு ஒதுக்கீடு குறைவு

அரசு ஊழியர்கள் கூறியதாவது: மருத்துவ காப்பீடு திட்டத்தில் எங்களுக்கு முதலில் செலவு தொகையில் 50 சதவீதம் தந்தனர். காலப்போக்கில் அது 25 சதவீதமாக (உதாரணத்திற்கு ரூ.1.45 லட்சம் செலவழித்தால், ரூ.31,000 தான் தருகின்றனர்) குறைத்து விட்டனர். காப்பீட்டிற்கான பிரீமிய தொகை செலுத்தி பயனில்லாமல் போகிறது. பட்டியலில் இருந்து பல முக்கிய மருத்துவமனைகளை நீக்கிவிட்டனர். ஊழியர்கள் சொந்த முயற்சியில் முக்கிய மருத்துவமனைக்கு சென்றால், பில் தொகையில் 20 சதவீதம் தான் தருகின்றனர். மருத்துவ செலவு தொகையில் 60 சதவீதத்தை வழங்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவ காப்பீடு திட்டத்தை மறுபரிசீலனை செய்யாமல், மேலும் அதே இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு ஆண்டு கால நீட்டிப்பு அளித்தது சரியல்ல, என்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sundaresan S
ஜூன் 26, 2025 13:32

ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்யலாம். மாதா மாதம் பிடிக்கும் தவணைத்தொகையை அஞ்சலக மாதாந்திர சேமிப்பில் போட்டுவந்தாலே கணிசமான தொகை கிடைக்கும்.


sundarsvpr
ஜூன் 26, 2025 08:52

மருத்தவ காப்பீடு வாங்குபவர்கள் வாங்கிகொண்டுஇருக்கிறார்கள். காரணம் இது ஒரு வியாபாரமாகி பயன் அடைவது சிலரே. சிலர் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிப்பதை அரசு நிறுத்தினால் அரசு சிந்திக்கும். தவறாக பணம் பெறுவதை தடுக்க யோசிக்கும்


Krishna Gurumoorthy
ஜூன் 26, 2025 08:36

பிரதமர் காப்பீட்டில் சேர்ந்துவிடலாம்.இவரகள் 450 வாங்கி ஏப்பம் விடுகின்றனர் விடியாத கொள்ளை அரசு


Dhanraj V.
ஜூன் 26, 2025 08:23

கூடுதலாக ரூ. 300 பிடித்துக் கொண்டு கூடுதல் பலனை அரசு வழங்கலாம் பரிசீலிக்க வேண்டும்.


Svs Yaadum oore
ஜூன் 26, 2025 07:51

செலவு தொகையில் 50 சதவீதம் தந்தனர். காலப்போக்கில் அது 25 சதவீதமாக குறைத்து விட்டனர். பட்டியலில் இருந்து பல முக்கிய மருத்துவமனைகளை நீக்கிவிட்டனர். ஆனால் அதே இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு ஆண்டு கால நீட்டிப்பு. ஒன்றுமில்லாத இந்த திட்டத்திற்கு எதுக்கு நீட்டிப்பு. விடியலுக்கு கமிஷன் அடிப்படையில் நீட்டிப்பு செய்திருப்பார்கள் ....


Somasundaram
ஜூன் 26, 2025 07:47

இதில் அரசியல் வாதிகளுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையே "உள் ஒதுக்கீடு" இருக்கா


Suresh Suresh
ஜூன் 26, 2025 07:44

முதல்வர் காப்பீடு திட்டமாக மாற்றிவிடுங்கள்.


முக்கிய வீடியோ