உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு தருவதோ ரூ.1,000; மகளிருக்கு கிடைப்பதோ ரூ.600

அரசு தருவதோ ரூ.1,000; மகளிருக்கு கிடைப்பதோ ரூ.600

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மாதம் 1,000 ரூபாய் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் பயனாளிகளை வருவாய் துறைக்கு செல்லுமாறு விரட்டி அடிக்கின்றனர்.தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், குடும்ப தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், 2023ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 19 மாதங்களில், 1.14 கோடி குடும்ப தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் என, 21,657 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணி நடந்து வருகிறது.இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் குடும்ப தலைவியர் பலர், வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க இயலாமை, கணக்கு முடக்கம் உள்ளிட்ட காரணங்களால், வங்கி கணக்கை மாற்ற முயற்சித்து வருகின்றனர். சமூக நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், மாதம் 1,000 ரூபாய் பெற்றும் பயனில்லை என, குடும்ப தலைவியர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் பயனாளி ஒருவர் கூறியதாவது:மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது, பூஜ்ஜிய வங்கி இருப்பு கணக்கு வழங்காமல், குறைந்தபட்ச தொகை பராமரிக்கப்படும் வங்கி கணக்கை கொடுத்து விட்டேன். இதனால், அரசு மாதம் 1,000 ரூபாய் செலுத்தியும், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.வங்கி நிர்வாகம் குறைந்தபட்சம் 500 ரூபாய் பராமரிக்க வேண்டும் என்கிறது. மாறாக, முழுத் தொகையும் எடுத்தால், அடுத்த மாதம் 1,000 ரூபாய் வரவு வைக்கும் போதே, பராமரிப்பு தொகை, அபராதம் என 350 ரூபாய் பிடித்து விடுகின்றனர்.இதனால், திட்டம் துவங்கியது முதல் மாதம் 600 ரூபாய் தான் எனக்கு கிடைக்கிறது. எனவே, மாற்று வங்கியில் பூஜ்ஜிய வங்கி இருப்பு கணக்கை துவங்கி, கடந்தாண்டு நவம்பர் மாதம் வங்கி கணக்கை மாற்றும்படி, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தேன்.அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களிடம் கேட்ட போது, 'திட்டம் மட்டுமே எங்களுடையது; செயல்பாடு வருவாய் துறையினருடையது; நீங்கள் அங்கு சென்று கேளுங்கள்' என விரட்டி விட்டனர்.சமூக நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கியும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் கீதா ஜீவன் இப்பிரச்னையில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அட்டூழியன்
ஜூன் 09, 2025 06:30

அரசியல்வாதிகள் சொல்லாம அடிப்பாங்க. வங்ககள் சொல்லிவெச்சு உருவும் தீவட்டி கொள்ளைக் காரர்கள்.


Neelachandran
ஜூன் 08, 2025 19:54

முதல் முறை 500 எடுத்துக்கொண்டால் மறுமுறை முழுத்தொகையையும் எடுக்கலாமே.தர்க்க நியாயம் வேண்டும்.


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 08, 2025 19:27

இலவசங்களால் நாடு குட்டிச்சுவராகி விட்டது. வேலைக்கு ஆள் கிடைக்காமல் எல்லா தொழிலும் நசுங்கி விட்டது. இலவசமாக எல்லாம் கிடைப்பதால், மது அருந்தி விட்டு வேலைக்கு யாரும் போவதில்லை. TNEB LOSS Rs. 1,50,000 கோடி இலவச கரண்ட் TNSTC LOSS Rs 1,20,000 கோடி இலவச போக்குவரத்து


அப்பாவி
ஜூன் 08, 2025 13:09

ஏம்மா ... ஒரு மாசம் உரிமைத் தொகையை எடுக்காம வங்கில வெச்சு மினிமம் பேலன்சை வெச்சுக்க முடியாதா? விடியல் அரசை விட ரொம்ப தத்திங்களா இருக்கீங்களே.... உங்களை இப்பிடி வளத்து விட்டிருக்காங்க.


V Venkatachalam
ஜூன் 08, 2025 13:00

இந்த அம்மா ஜீவனிடம் போய் மனு கொடுத்திருக்கு. ஐயோ பாவம். அந்த அம்மாகிட்ட அதே வங்கியில் ஒரு தடவை மினிமம் பேலன்ஸ் பணத்தை வைத்து கொண்டு பாக்கி பணத்தை எடுத்து கொள்ள சொல்லி இருக்கணும். ஜீவன் குடும்பமாக அரசியலில் இருந்து கொண்டு குடும்பமா கொள்ளை அடிக்குது.


Kanns
ஜூன் 08, 2025 11:34

RECOVER Immediately All 90% UNDUE FREEBIES/Concessions etc etc Other than MinmWageJobs Equally Only One Per Family 50% Each From RulingParties-PartyMen & FreebiesAvailers. Till then DeRecognise Parties/Leaders& CitizenRights


vbs manian
ஜூன் 08, 2025 10:31

ஊரக வேலை திட்டத்திலும் கையெழுத்து போட்ட அளவுக்கு பணம் கொடுப்பதில்லை.


Padmasridharan
ஜூன் 08, 2025 09:06

இந்த 1000௹ யை எப்படி, எதற்காக பயன்படுத்துகிறார்கள் பெண்கள். எனக்கு தெரிஞ்சி நிறைய வீட்டுல ஆண்கள் மதுக்கடைக்குதான் வாங்கி செல்கிறார்கள் இதை


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 08, 2025 19:29

மிகவும் உண்மை.


VENKATASUBRAMANIAN
ஜூன் 08, 2025 08:05

இதுதான் திராவிட மாடல் அரசு. அதிகாரிகள் திமுக விடம் பயிற்சி பெற்றுள்ளனர்.


மீனவ நண்பன்
ஜூன் 08, 2025 07:52

1000 ரூபாய்க்கு பதில் நாலு குவாட்டர் கேட்டால் கிடைக்க வாய்ப்பு அதிகம்


புதிய வீடியோ