உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கனிம வளத்துறையில் நடந்த கோடிக்கணக்கான வருவாய் இழப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு இரு மாவட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்றவர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.இம்மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்து ஜல்லி, எம் சாண்ட் தயாரிக்கும் கிரஷர் ஆலைகளுக்கு கற்களை எடுத்துச் செல்ல கனிமவளத்துறையினர் அனுமதி நடைச்சீட்டு வழங்குகின்றனர். எத்தனை நடை சீட்டு வழங்கப்படுகிறதோ அதற்கு இணையான அளவு ஜல்லி மற்றும் எம் சாண்ட் போன்றவை வெளியிடங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும்.ஆனால் திருநெல்வேலியில் சுமார் 100 நடை சீட்டு கற்கள் கொண்டு செல்ல அனுமதி பெற்ற குவாரிகளுக்கு 100 ஜல்லி மற்றும் எம் சாண்ட் கொண்டு செல்லவே அனுமதி தரப்படும். ஆனால் 100 நடைச்சீட்டுக்கு பதில் 500 அனுமதி பாஸ் பெற்றுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு குவாரிகளின் முறைகேடுகளுக்கும் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அவருடன் உடன் பணியாற்றும் அதிகாரிகள், தட்டச்சர், டிரைவர் வரை கூட்டாக செயல்பட்டு கோடிக்கணக்கில் சுருட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் வரை புகார்கள் சென்றன.தமிழக இயற்கை வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் சரவணவேல்ராஜ் உத்தரவின்படி கனிமவள மதுரை மண்டல இணை இயக்குனர் சட்டநாதன் இரு நாட்களாக கனிமவளத்துறையில் ஆய்வு மேற்கொண்டார். நடை சீட்டுக்கும்,ஜல்லி, எம் சாண்ட் கொண்டு சென்றதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தது தெரிந்தது. ரூ. பல கோடி அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து உதவி இயக்குனர் ஏ.பாலமுருகன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். உதவி புவியியலாளர் எஸ்.சேகர், உதவியாளர் சொர்ணலதா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இளநிலை உதவியாளர் காசிராஜன், தட்டச்சர் ஈஸ்வரி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். அலுவலக கார் டிரைவர் ரமேஷ் சென்னை கிண்டி புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு மாற்றப்பட்டார். இத்துறையில் கூடுதலாக பணிபுரியும் ஒரு துணை தாசில்தார், இரு வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Saleemabdulsathar
மே 17, 2025 20:54

இப்படி பட்ட மோசடி செயல்களில் அரசு சரியான நடவடிக்கை எடுப்பதில்லை இடமாற்றம் என்ற பெயரில் கண்துடைப்பு நாடகத்தை நடத்து கின்றனர் இப்படிபட்ட மோசடி நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 17, 2025 17:27

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி... அதுக்கு இந்த கனிம வள கொள்ளையில் கூட்டணி அமைத்து அரசு பணத்தை ஆட்டையை போட்ட எங்கள் தி மு க ஊழல் மாடல் அரசில் பணியாற்றிய அதிகாரிகளே சாட்சி.... இன்னும் தோண்ட தோண்ட வரும் எங்கள் ஆட்சியின் ஊழலின் பரிணாம வளர்ச்சி.....


V Venkatachalam
மே 17, 2025 15:30

துறை ரீதியான நடவடிக்கை என்னான்னா, கொள்ளை அடித்த பணத்தில் பாதிய வெட்டி எங்கெங்கு போடணூமோ அதை போட்டுட்டா ஆறு மாதத்தில் அதே இடத்தில் அதே போஸ்டிங். அப்புறம் என்ன. சஸ்பெண்டு பண்ணியவர்கள் முகத்தில் கரிய பூசிடலாம். எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது.


Kasimani Baskaran
மே 17, 2025 15:14

கூட்டாக கொள்ளை அடிப்பது ஒன்றும் புதிது இல்லையே...


தத்வமசி
மே 17, 2025 14:19

பணம் சம்பாதிக்க எதையும் செய்யலாம் என்று அரசியல்வாதிகளும், அவர்களின் ஜால்ராக்களும் முடிவு செய்து விட்டார்கள். பூமியை பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்குத் தரவேண்டாமா ? பணம் தான் எல்லாமேவா ? இயற்க்கை அன்னையை அழித்து சேர்த்த பணத்தை வைத்து நீங்களும் உங்கள் சந்ததியினரும் எப்படி நிம்மதியாக வாழ இயலும் ? சமுதாயத்தின் சீர்கேடு இவர்கள்.


சிந்திப்பவன்
மே 17, 2025 13:53

இம்மாதிரியான ஊழல்கள் தொடர்ந்து நடை பெறாமல் இருக்க ஒரே வழி . .வரும் 2026 சட்ட மன்ற தேர்தலிலும் திமுக விற்கே அனைவரும் வாக்களித்து அமோகமாக வெற்றி பெற செய்து மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதுதான்


Anbuselvan
மே 17, 2025 12:29

திராவிட மாடல் அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று


karthik
மே 17, 2025 12:24

என்ன பிரயோஜனம்? ஆயிரம் கோடி கணக்கில் கொள்ளை அடித்தாகிவிட்டது..அதில் சில பல கோடிகள் அந்த அதிகாரிகளுக்கும் சென்றிருக்கும் இதற்கு மேல் அந்த அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றால் என்ன சும்மா இருந்தால் என்ன ? மக்கள் ஏமாளிகள்


Ramalingam Shanmugam
மே 17, 2025 11:32

இழப்புக்கு இடமாற்றம் துறை ரீதியான நடவடிக்கை இட மாற்றம் தான் தீர்வா லஞ்சம் வாங்கி சேர்ந்தது லீகல் ஆகி விட்டது ஆஹா என்ன ஒரு நீதி வெட்கப்படணும்.


அப்பாவி
மே 17, 2025 11:20

கூண்டோட மாத்தப்பட்ட அதிகாரிங்களே.. சீக்கிரம் ஆட்டையப் போட்டதுக்கான தடையங்களை அழிச்சிருங்க.ஒருவேளை மாட்டிக்கிட்டா, மேலே ஒத்தாசையா இருந்த அமிச்சர்களையும் பக்காவா மாட்டி உடுங்க.