உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல் ஜீவன் குடிநீருக்கு மாதம் ரூ.30 கட்டணம்: கிராம மக்களிடம் வசூலிக்க அரசு உத்தரவு

ஜல் ஜீவன் குடிநீருக்கு மாதம் ரூ.30 கட்டணம்: கிராம மக்களிடம் வசூலிக்க அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இதுவரை ஒரு கோடி வீடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக, ஒரு நபருக்கு சராசரியாக, தினமும் 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இப்பணிக்கு முதல் கட்டமாக, 3,249 கோடி ரூபாய்; இரண்டாம் கட்டமாக 3,307 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை முடிக்க, 2025 மார்ச் வரை, மத்திய அரசிடம் தமிழக அரசு அவகாசம் கேட்டுள்ளது.இந்நிலையில், குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை செய்வதற்காக, குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளில், மாதம் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்க, ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளை, 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி' என்று ஊராட்சி தலைவர்கள் சான்றளிக்க வேண்டும்.குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட வீட்டின் குடும்ப தலைவர் ஆதார் எண்ணை, ஜல் ஜீவன் இயக்க இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மலைப் பகுதி, வனப்பகுதி, 50 சதவீதத்திற்கு மேல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதி ஆகியவற்றில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மூலதனசெலவில், 5 சதவீதம், மற்றபகுதிகளில் 10 சதவீத தொகையை, மக்களிடமிருந்து பணமாக, பொருளாகஅல்லது உடல் உழைப்பாக பெற வேண்டும்.இதற்காக மாதந்தோறும் குறைந்தபட்சம், 30 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதை பின்பற்றினால்தான், இத்திட்டத்திற்கான 50 சதவீத பங்களிப்பு நிதியை, மத்திய அரசு வழங்கும். எனவே, கிராம மக்களிடம் குடிநீர் கட்டணம் வசூலிப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

gangadharan gangadharan
அக் 05, 2024 10:04

வணக்கம் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் கட்டணமாக ஜல் ஜீவன் திட்டத்தில் இணைந்த நாங்கள் கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் அதற்கு கட்டணமாக ஒரு மாதம் 70 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து நிர்வாகம் சொல்கிறார்கள் இதற்கு என்ன தீர்வு ஈரோடு மாவட்டம் முழுவதும் இது போலத்தான் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்


Subash BV
அக் 04, 2024 19:32

Nothing will happen. This will lead to suitcases politics. Instead fix accountability in govt spending. Dont waste public money in the name of several items and schemes.


venugopal s
அக் 04, 2024 11:39

செய்தியின் கடைசி பாராவை நன்றாக படிக்கவும். இந்த வரி வசூலித்தால் தான் மத்திய அரசு தனது நிதி பங்களிப்பை வழங்கும். அதனால் இதற்கும் மாநில அரசை குறை சொல்ல முடியாது!


xyzabc
அக் 04, 2024 10:50

திராவிட மாலின் soolchi


sundaran manogaran
அக் 04, 2024 09:09

பல ஊர்களில் வெறும் காத்து தாங்க வருது... அதுக்கும் 30ரூபாயா??


GMM
அக் 04, 2024 08:11

மத்திய அரசு வழிகாட்டுதலில் மூலதன செலவை பணம், பொருள் , உடல் உழைப்பாக பெறவேண்டும் என்கிறது. மாநில ஊரக வளர்ச்சி துறை ரூபாய் 30 மட்டும் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. பணம் உள்ளாட்சிக்கா , மாநில நிர்வாகத்திற்கா , மத்திய அரசுக்கா பணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட்டது முரண். ஆதார் இணைப்பு ஒருவருக்கு ஒரு இணைப்பை உறுதி செய்யும். மத்திய அரசின் சரியான உத்தரவு.


karthik
அக் 04, 2024 08:39

இங்க தான் இருக்கும் பணத்தை எல்லாம் ஓட்டுக்காக ஓசி குடுத்துட்டு ஆரசாங்கம் நடத்த நக்கிட்டு இருக்காணுங்கள்ல அதுனால முடிந்த வழிகளில் எல்லாம் மக்களை சுரண்டி திங்க பார்க்குறானுங்க


Lion Drsekar
அக் 04, 2024 06:50

இலவசமாகக்கொடுக்கவேண்டிய அனைத்துமே இன்றைக்கு அரசு விற்க ஆரம்பித்துவிட்டதால் வெளியே பயிரை மேய்வதற்கு சமம், எதற்க்காக அன்று உப்பு சதியா ,, செய்தார்கள் இன்று அந்த உப்புக்கு மட்டும் இல்லை எல்லாவற்றிக்கும் தண்டல்


Samy Chinnathambi
அக் 04, 2024 06:48

பாதுகாப்பான குடி நீரை பொது மக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை. இதற்கு கட்டணம் வசூலிப்பது அயோக்கியத்தனம். ஐந்து வருடம் கழித்து முப்பது ரூபாய் முன்னூறு ரூபாய் ஆகி விடும் ..


Venkatesan Elumalai
அக் 04, 2024 06:36

எந்த அரசு உத்தரவு போட்டது. தெளிவா போடுங்க.


Venkatesan Elumalai
அக் 04, 2024 06:31

இங்கு சில திமுக ஊபீஸ், ஏதோ மத்திய அரசு கிராமங்களில் குடிநீர் கட்டணம் வசூலிக்க சொல்வதாக எழுதுகிறது. இப்படிப்பட்ட முரட்டு கொடுக்கும் ஆசாமிகள் இருக்கும் வரை திமுகவின் கொள்ளை தொடரும். இந்த கட்டணத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இவர்கள் வசூலித்து மத்திய அரசுக்கு அனுப்பப் போவதில்லை.


புதிய வீடியோ