உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய பள்ளி கட்டடங்களை உடனே இடிக்க அரசு உத்தரவு

பழைய பள்ளி கட்டடங்களை உடனே இடிக்க அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பயன்பாடில்லாத பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க, பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், செயலர் மதுமதி பிறப்பித்த உத்தரவு:அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை, டிசம்பருக்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவக்க வேண்டும்.மழைக்காலம் துவங்க உள்ளதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படும் முன், பள்ளிகளில் ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும். அதற்கு பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி, பொதுப்பணித் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், விஷப் பூச்சிகளிடம் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், தற்போதைய காலாண்டு விடுமுறையில், பள்ளி வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். இடைநிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் உள்ளிட்டவற்றை தவிர்க்க, நீண்ட காலமாக பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.குழந்தைகளை 'போக்சோ' குற்றத்திற்கு ஆளாக்காத வகையில், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆர்த்தி, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உமா பங்கேற்றனர்.

ரூ.798 கோடியில் கட்டடம்

மாநிலம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு போதுமான வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்ட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக, நபார்டு வங்கியிடம் வாங்கிய 284 கோடி ரூபாயை பயன்படுத்தி, 546 ஆரம்பப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டும் பணி நடக்கிறது.இதை தொடர்ந்து, 497 உயர்நிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டும் பணிகள், 798 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கவுள்ளன. இதற்கு கடனுதவி வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு வகுப்பறை கட்டுவதற்கு 22 லட்சம் ரூபாயும், கழிப்பறைக்கு 10 லட்சம் ரூபாயும் செலவிடப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VENKATASUBRAMANIAN
செப் 28, 2024 08:01

எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிக்கூடங்கள் உள்ளனர். இதை சரி செய்ய துப்பில்லை திராவிட மாடல் அரசு.இந்தி அவர்கள் பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு கற்பித்து கொடுக்கக்கூடாது. இதுதான் திமுக அதிமுகவின் நிலைப்பாடு. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் எல்லாம் படிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்.


A P
செப் 28, 2024 08:00

சுமார் 50 ஆண்டு கூட தாங்காத அப்படிப்பட்ட மோசமான கட்டிடங்களை , எந்த கட்சி ஆட்சியில், எந்த இன்ஜினியரால், எந்த கான்டராக்டரால் , எவ்வளவு தரத்தில் கட்டப்பட்டன என்று வெள்ளை அறிக்கை வருமா? அதில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார் யார் , அரசியல் வாதி யார், வட்டம், மாவட்டம், மாநிலம் யார் யார், மந்திரி யார், என்பதெல்லாம் கண்டுபிடித்து, அவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்க வேண்டாமா? இப்போது புது திட்டம் போட்டு, நிதி ஒதுக்கி , புது கட்டிடம் கட்டினால் அது எத்தனை வருடங்களுக்கு, நன்றாக இருக்கும் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாமா?


குணவேல்
செப் 28, 2024 06:28

அது சரி.. இடிச்சுட்டு பசங்களை எங்கே உக்காத்தி வெச்சு சொல்லிக்.குடுப்பீங்க? சமச்சீர் கல்வில ஆல்.பாஸ் போட்டு இஞ்சினீரிங், மெடிக்கல் சீட் குடுக்குற ஐடியா இருக்கா? எப்புடி ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணுனீங்க?


Ravi Kumar Damodaran
செப் 28, 2024 08:06

பள்ளிகளில் ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள கட்டடங்களை...


Kasimani Baskaran
செப் 28, 2024 06:28

முன்னேறி விட்டோம் என்று உருட்டும் திராவிட சிசுக்கள் அடிப்படை விஷயத்தைக்கூட சரியாக செய்யவில்லையே என்று ஒரு உடன் பிறப்பும் கேள்வி கேட்க மாட்டான். அவன்தான் அப்படி என்றால் ஒரு பாமரனோ சங்கியோ கூட கேள்வி கேப்பதில்லை.


kannan sund Kannan
செப் 28, 2024 05:17

சென்ற நூற்றாண்டில் இதையே பேசினார்கள். இந்த நூற்றாண்டிலும் இதையே பேசுகிறார்கள். அடுத்த நூற்றாண்டிலும் இதையே பேசுவார்கள்.


Ravi Kumar Damodaran
செப் 28, 2024 08:10

பாறாங்கல் கட்டிடம் ஆயுள் - 100 முதல் 1000 வருடம். செங்கல் கட்டிடம் ஆயுள் - 30 முதல் 100 வருடம்.


புதிய வீடியோ