உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்ப்பூசணி பழங்களில் ரசாயனமில்லை; விளம்பரம் செய்ய அரசுக்கு உத்தரவு

தர்ப்பூசணி பழங்களில் ரசாயனமில்லை; விளம்பரம் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை:'தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில், எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்கு, ஊசி வாயிலாக ரசாயனம் செலுத்தப்படுகிறது எனக்கூறி, பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செங்கல்பட்டு விவசாய நல சங்கத் தலைவர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.மனுவில், 'அதிகாரிகள் வேண்டுமென்றே பொது மக்களிடையே, தவறான தகவலை பரப்பியதால், தர்பூசணி விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தவறான தகவலை பரப்பிய, உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தர்பூசணி பழங்களை அரசே கொள்முதல் செய்து, அதற்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்' என்று, குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'மாநிலத்தில் பல்வேறு இடங்களில், தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில், எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டது.இதைப்பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு கட்டும் வகையில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
ஏப் 17, 2025 19:41

அந்த அல்லக்கை அதிகாரியை டிஸ்மிஸ் பண்ணுங்க...


Yasararafath
ஏப் 17, 2025 14:47

யாருக்கு தெரியும் கலப்படம் இருக்கு இல்லை என்று


Chidambarakrishnan K
ஏப் 17, 2025 11:21

கவுண்டமணி ஒரு படத்தில் தேங்காய் க் குள் bomb இருக்கு என்று சொல்வாரே, அதை நினைவுப் படுத்துகிறது இந்த சம்பவம்.


Bhaskaran
ஏப் 17, 2025 11:14

அதிகாரி முதல்வர் உறவினன் அதனால் நடவடிக்கை இல்லை


K.Ramachandran
ஏப் 17, 2025 11:07

சில நபர்களின் பேராசையினால் பல விவசாயிகள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்


R.RAMACHANDRAN
ஏப் 17, 2025 08:26

அரசு ஊழியர்கள் அவர்கள் மட்டுமே ஜீவித்திருக்க வேண்டும் என்ற மனா நிலையில் இருந்து கொண்டு மற்றவர்கள் பிழைப்பை கெடுப்பதிலேயே குறியா உள்ளனர்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 17, 2025 07:31

softdrink companies like pepsi, coke tend to bribe officials to give false narratives.at any cost we need to boycott pepsi, coke products including maaza, sprite etc. softdrink are unhealthy


M R Radha
ஏப் 17, 2025 07:11

காசு வாங்கி விவசாயிகளின் வயிற்றில் அடித்த அதிகாரியின் சம்பளத்திலிருந்து விளம்பரம் செய்க


உண்மை கசக்கும்
ஏப் 17, 2025 07:01

ரசாயனம் கலந்தது உண்மை. மிக பெரிய நஷ்டம் வருவதை பார்த்து விட்டு, ஊசி போடுவதை நிறுத்தி விட்டு, இப்போது பரிசோதனை செய்தால் என்ன முடிவு இருக்கும் . வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களில் நடக்கும் ரசாயன கலப்படத்திற்கு அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது? நீதிமன்ற நீதிபதிகளும் அதே பழத்தை தானே சாப்பிடுகிறீர்கள்.


Raa
ஏப் 17, 2025 05:40

அந்த விளம்பர செலவை அந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சம்பளப்பணத்தில் பண்ண சொல்லவும். அவர்கள் தவறுக்கு மக்கள் வரிப்பணத்தில் எதற்கு விளம்பரம்? " " செய்யும் விளம்பரங்களே பல உருப்புடாதவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை