மேலும் செய்திகள்
'பள்ளிகள் நிர்வாகத்தில் எக்கச்சக்க குளறுபடி'
02-Jan-2025
சென்னை:தமிழகத்தில் நுாறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகளில், நாளை முதல் விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நாட்டில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலம் தமிழகம். அதிலும், நுாறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், மாவட்ட வாரியாக நுாற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும். அதில், பெற்றோர், ஆசிரியர், முன்னாள், இந்நாள் மாணவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி பெருமைப்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இன்று நுாற்றாண்டு திருவிழாவை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைக்க உள்ளார். நாளை முதல் மற்ற மாவட்டங்களில் விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
02-Jan-2025