இடிந்து விழும் அரசு பள்ளி கட்டடங்கள்
நீலகிரி மாவட்டம், கூடலுாரை அடுத்த பந்தலுாரில் பெய்த மழையில், தேவாலா அரசு மேல்நிலை பள்ளியின் மேற்கூரை பறந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்து, அந்த வீட்டின் மேற்கூரையையும் சேதப்படுத்தி இருக்கிறது. 10,000 புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளி கட்டடங்களே அதிகம். மலை பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை கூட, இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் சரி செய்யப்படவில்லை. தி.மு.க., அரசு வெற்று விளம்பரங்களுக்கு செய்யும் செலவை, இத்தனை பள்ளி கட்டடங்கள் கட்டியுள்ளோம் என்று முழு விபரங்களோடு விளம்பரம் செய்யலாமே? அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,