உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சி

குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சி

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:'அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, அன்று கூறினர். 'ஞானசேகரன் தி.மு.க., அனுதாபிதான். ஆனால், தி.மு.க., நிர்வாகி இல்லை' என்கின்றனர் இன்று. விரைவில், 'யார் அந்த சார்?' என்கிற புதிருக்கு, முற்றுப்புள்ளி வைக்கும்போது, 'ஞானசேகரன் ஒரு தி.மு.க., நிர்வாகிதான்' என்பதை இவர்கள் ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு அறிக்கை:அண்ணா பல்கலை மாணவி, தி.மு.க., நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், தி.மு.க., அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், குற்றவாளி குறிப்பிட்ட இன்னொரு நபர் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழக பா.ஜ., இளைஞர் அணி நிர்வாகிகளை, காவல் துறை கைது செய்துள்ளது.வழக்கை திசை திருப்பும் முயற்சியில், ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஈடுபட்டு வரும் அரசு, நேர்மையான விசாரணை கோரும் குரல்களை ஒடுக்குவது, அப்பட்டமான ஜனநாயக மீறல். குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில், மேலும் மேலும் அரசு தவறு செய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !