உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் குற்றச்சாட்டு போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

கவர்னர் குற்றச்சாட்டு போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

சென்னை:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடந்த போதை ஒழிப்பு மாநாட்டில், கவர்னர் ரவி பேசுகையில், 'தமிழக போலீசார் கஞ்சாவை மட்டுமே பறிமுதல் செய்கின்றனர். சிந்தடிக் போதை பொருட்களான ஹெராயின், ஓ.பி.எம்., உள்ளிட்டவைகளை, மத்திய போலீஸ் படையினர் மட்டுமே பிடிக்கின்றனர். 'மாநில போலீசாரால் ஏன் ஒரு கிராம் கூட இத்தகைய போதை பொருட்களை பறிமுதல் செய்ய முடிவதில்லை' என்று, கேள்வி எழுப்பினார்.அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட செய்தி குறிப்பில், 'கடந்த ஆகஸ்டில், 641 வழக்குகளில், 1965 கிலோ கஞ்சா, 10,634 போதை மாத்திரைகள், மெத்தாம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, 1,148 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்' என, கூறியுள்ளார்.இந்நிலையில், போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆய்வு நடத்தினார். அப்போது, ஹெராயின், மெத்தாம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், ஓ.பி.எம்., உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ