உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் ரவியும், அண்ணாமலையும் பதவியில் தொடர வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்

கவர்னர் ரவியும், அண்ணாமலையும் பதவியில் தொடர வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'கவர்னர் ரவியும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களே நம்மை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்' என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது; 2021 சட்டசபை தேர்தலின் போது என் மேல் நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய குறிக்கோளுடன் உழைத்து வருகிறோம். பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. அனைத்து துறைகளில் தமிழகம் வளர்ந்து வருகிறது. மத்திய அரசு மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால், இன்னும் வேகமாக தமிழகம் வளர்ந்திருக்கும். மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பா.ஜ., அமைத்தாலும், பழைய மாதிரியே சர்வாதிகார போக்கையே கடைபிடிக்கிறது. பேரு தான் மத்திய பட்ஜெட். அந்த பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயரும் இடம்பெற்றிருக்கா? அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் தான் பட்ஜெட் அமைந்திருக்கு. 4 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பே இல்லை. கல்விக்கு 2.3 சதவீதமும், சுகாதாரத்துக்கு 1.8 சதவீதமும் தான் ஒதுக்கியிருக்காங்க. பாதுகாப்புக்கு 4.19 லட்சம் கோடியும், உள்துறைக்கு 2.33 லட்சம் கோடியும் கொடுத்துள்ள பா.ஜ., சமூகநலத்துறைக்கு ரூ.60 ஆயிரம் கோடிதான் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை இதை விட சாட்சி வேண்டுமா? பட்டியல், பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு குறைவு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, எல்.ஐ.சி.,யை ஒழிக்க முயற்சி, உரம் மற்றும் பெட்ரோலிய மானியம் குறைப்பு தான் இந்தப் பட்ஜெட்டில் இருக்கிறது. ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் இருக்கிறவர்களுக்கு வருமான வரிச்சலுகை என அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடி. அதில், 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு தான் இந்த சலுகை. இதையே பெரிய சாதனையாக காட்டுகிறார்கள். அனைத்து மாநிலங்களுக்கான மத்திய பட்ஜெட் என்று சொல்லிவிட்டு, பிஹார் மாநிலத்தின் பெயரை மட்டும் 6 முறை அறிவிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனெனில் அங்கு தான் சட்டசபை தேர்தல் வருகிறது. பிஹார், ஆந்திராவுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, 'நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? இல்லை, தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது பெருமையா?' உங்களுடைய மனசாட்சிக்கே இந்தக் கேள்வியை விட்டு விடுகிறேன். மாநிலங்களுக்கு நிதி தராத மத்திய அரசு, வட்டியில்லா கடனை கொடுக்கிறது. வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக் கடையா? இதுதான் கூட்டாட்சியா? இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு தமிழகத்தை பிடிக்கலையா? நீங்கள் நிதியைக் கொடுக்காமல் இருக்கலாம். நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவராக இருக்கலாம். நாங்கள் வாழவைப்பவர்கள். கவர்னர் ஆர்.என்.ரவி தமிழை அவமதிப்பதையே வழக்கமாக கொண்டு வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் பேசுகிறார். தமிழகத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டுகிறார். ஆனால், கவர்னர் இங்கு விமர்சிக்கிறார். தி.மு.க., ஆட்சி இருக்கும் வரையில் கவர்னர் ரவியும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களே நம்மை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை கவர்னர் மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு எனும் பகுத்தறிவு உடைய மக்கள் வாழும் மாநிலம் தமிழகம். கும்பமேளாவுக்கு சென்றவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது பா.ஜ., அரசின் கடமையல்லவா? அமெரிக்காவில் இருந்து கைவிலங்கிட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தான் இந்தியர்களை காப்பாற்றும் முறையா?. அமெரிக்கா அரசுடன் இந்தியர்களின் நிலை குறித்து பேசியிருக்க வேண்டாமா? இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Kjp
பிப் 15, 2025 14:29

முதல்வர் மேக்கப்புடன் எழுதிகொடுத்ததை ஃபோட்டோ சூட்டுடன் ஒப்பிக்கவேண்டும்.ஆர்.எஸ.பாரதி சவால் விடவேண்டும்.இதெல்லாம் செய்தால் பிஜேபி வளர்ந்து வேகமாக வளர்ந்து விடும்.


Sundar Pas
பிப் 09, 2025 19:45

அதுகெட்ட கேட்டுக்கு இரண்டு ஐபிஎஸ் மூளையை கிண்டல் செய்கிறாராம்? முதல்ல நீங்க தான் வேணும் பிஜேபியை தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு.


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:38

அப்போ எதுக்கு உச்ச நீதிமன்றம் போய் கதவை தட்டி கொண்டு ???


Mahendran Puru
பிப் 09, 2025 09:25

திருப்பரங்குன்றம் மலையை தேடி கண்டுபிடித்து கொண்டு வாருங்கள் சங்கிகளே, எடப்பாடியின் இமாலயத் தவறினால் தமிழ் மண்ணில் காலூன்றியவர்களே மதுரையின் அமைதியை குலைக்கும் உங்கள் எண்ணம் ஈடேறாது.


velan iyyangar, Sydney
பிப் 09, 2025 08:36

அய்யா அடுத்த முறையும் நீங்களே வரவேண்டும். அப்போ தான் மக்கள் முழு துன்பமும் அனுபவித்து உங்க மாடலை வேரொடு அழித்து ஒழித்து விடுவர். அஸ்ஸாம், திரிபுரா, வங்காளம் எப்படி கம்மிகளுக்கு நிரந்தர சமாதி கட்டினர்...ஜஸ்ட் இன்னும் 5 வருசம் தான்...


Tetra
பிப் 09, 2025 07:15

அகம்பாவத்தின் உச்சம். மேலே போனால் நிதானமில்லா விட்டால் தலை குப்புற விழ வேண்டி வரும். ஆணவம் நல்லதல்ல


sankar
பிப் 09, 2025 07:14

திருப்பரங்குன்றம் முருகன் உங்களை காலி செய்து காவிக்கொடியை ஏற்றுவான்


ManiK
பிப் 09, 2025 06:51

இந்த பாட்ட கேளுங்க சீஎம், துணைசீஎம் - ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா...நீ கொண்டுவந்ததென்ன நீ கொண்டுபோவதென்ன உண்மையென்ன உனக்கு புரியுமா...


Kumar Kumzi
பிப் 09, 2025 04:48

அதுசரி ஆளில்லா கடையில் டீ ஆற்றிவிட்டு கூமுட்டைத்தனமா கதைவிடுவதில் ஒனக்கு நீயே சர்டிபிகேட் குடுக்குற அறிவுக்கு நோவிக் விருது வழங்கலாம்


S.Martin Manoj
பிப் 09, 2025 12:20

ஆளில்லா டீ கடை உன்னோட பீ சப்பி தான்


Kumar Kumzi
பிப் 09, 2025 04:36

ஆமா ஓங்கோலில் இருந்து திருட்டு ரயிலில் வந்த உன் படிப்பறிவற்ற கூமுட்ட குடும்பம் தமிழ் நாட்டுக்கு வராமல் இருந்திருந்தால் தமிழ் நாடு மிகவும் சிறப்பாகவும் அமைதியாக உலகுக்கு வழி காட்டியிருக்கும்


S.Martin Manoj
பிப் 09, 2025 12:19

ஆட்சிக்கு வராமல் இருந்தால் நாடே நல்ல இருந்துறுக்கும்


புதிய வீடியோ