உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் வருத்தம் தெரிவிக்கணும்: சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர்!

கவர்னர் வருத்தம் தெரிவிக்கணும்: சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர்!

சென்னை: 'தேசிய கீதத்தை அவமதித்தவர் கவர்னர் ரவி தான். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் உரையை கவர்னர் புறக்கணித்தது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: கவர்னர் நடந்து கொண்ட விதம் தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. பாரம்பரியமாக தமிழக சட்டசபையில் என்ன நிகழ்வுகள் நடக்குமோ, அதே நிகழ்வுகள் தான் தொடர்ந்து நடக்கிறது. அதனை மாற்ற வேண்டும் என்று கவர்னர் முயற்சிக்கிறார். அது நடக்காது என்பதாலும், உரையை கவர்னர் வாசித்தால், தி.மு.க., அரசின் சாதனைகளை அடுக்க வேண்டும் என்பதாலும், இந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காகத் தான் அவர் இப்படி நடந்து கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=csw61x0t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=059 பக்கங்களில் அரசின் சாதனைகள் விரிவாக இருக்கிறது. அதனை படிப்பதற்கு தயங்கிக் கொண்டு தான், இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த முறை, தமிழக தலைவர்களின் பெயர்களை சொல்லாமல் மறைத்த கவர்னர், இந்த முறை ஒட்டுமொத்த உரையையும் புறக்கணித்துள்ளார். தேசிய கீதம் பாடப்படவில்லை என அவர் காரணம் கூறியுள்ளார். தேச பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகை அவர்தான் என்பது போல் பேசுகிறார். தேசபக்தியில் தமிழக மக்களை மிஞ்சி, அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. தேசத்திற்காக தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். இதுவரையில் எத்தனை கவர்னர்கள், முதல்வர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் தேசபக்தி கிடையாதா? அ.தி.மு.க., ஆட்சியில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கும் சட்டசபை கூட்டம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதைத்தான் தற்போதைய அரசும் செய்கிறது. எனவே, தேசிய கீதத்தை எந்த அவமரியாதையும் செய்யவில்லை. கவர்னர் இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே, அவரது நடவடிக்கைகளால் தமிழக மக்களால் புறந்தள்ளப்பட்டு வருகிறார். தான் ஒரு நியமிக்கப்பட்ட கவர்னர் என்பதை மறந்து, ஏதோ தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை விட தான் பெரியவர் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார். இதனால், தான் 'கவர்னர் ரவியே வெளியேறு' என்ற நிலையை அவர் ஏற்படுத்திக் கொண்டார். இன்று அவையை அவமதித்ததற்காக கவர்னர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். தேச பக்தியில் எங்கள் முதல்வருக்கோ, தி.மு.க.,வுக்கு பாடம் நடத்தக் கூடிய தகுதி இவருக்கு கிடையாது. சீனப் போர் முதல் கார்கில் போர் வரையில் தி.மு.க., வோ, அரசின் சார்பாகவோ, அதற்கான நிதி வழங்கியிருந்தால், மற்ற மாநிலங்களை மிஞ்சும் அளவுக்கு இருக்கும். தேசிய கீதத்தை அவமதித்ததே இந்த கவர்னர் தான். தேசிய கீதம் முடியும் வரை காத்திருக்காமல், கடந்த முறையும், இந்த முறையும் அவர் தான் வெளியேறினார். எனவே, அவர் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.பதவி காலம் முடிந்த பிறகும், மத்திய அரசோ, பிரதமரோ, ஜனாதிபதியோ சொல்லாமல், கவர்னர் ரவி இந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கு அவர் தான் அவமானப்பட வேண்டும். அவரே ராஜினாமா செய்து சென்றால் தான், அவர் படித்த ஐ.பி.எஸ்.,க்கு அழகு, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Matt P
ஜன 24, 2025 13:47

பதவி காலம் முடிந்த பிறகும், மத்திய அரசோ, பிரதமரோ, ஜனாதிபதியோ சொல்லாமல், கவர்னர் ரவி இந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்? பதவிக்காலம் முடிந்த பிறகு எப்படி நீடிக்க முடியும். அரசியல் அறிவு இல்லாதவன் எல்லாம் அமைச்சர்.


PARTHASARATHI J S
ஜன 07, 2025 08:12

திமுகவிற்கு ஆளுநரைக் கண்டாலேயே பிடிக்காது. மோசமான விதண்டாவாத சட்டங்களை வேண்டுமென்றே கொண்டுவந்து அதிமுகவை மயக்கி சட்டத்தை நிறைவேற்றுவர். மோடி ஆட்சியை கலைக்க மாட்டார் என்ற தைரியம். எடப்பாடியாரும் மாய உலகில் பயணிக்கிறார். ஒற்றுமை வானத்திலிருந்து கொட்டாது. இந்த அமைச்சர் மேல் அமலாக்கத்துறை நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கும். தமிழ்நாடு அரசு கலைக்கப்பட வேண்டும் என்பதே என்னைப் போன்ற பாமரனின் விருப்பம்.


தமிழ்வேள்
ஜன 06, 2025 20:27

உதிரம் சொட்ட சொட்ட ராணுவ கேம்ப்களில் வைத்து அடித்து நொறுக்கினால் இவரது கதறல் ஆனந்தமாக இருக்கும் அடுத்த ஐந்து தலைமுறைகளுக்கு எவனும் திராவிடம் அண்ணா துரை கருணாநிதி ராமசாமி என்று பேசக்கூடாது..


Barakat Ali
ஜன 06, 2025 18:59

ரொம்ப பொங்குறீங்களே ...... யாரு அந்த சார் ????


Dharmavaan
ஜன 06, 2025 16:54

இவன் சாராயம் குடிக்கும் கை நாட்டு பையன் .பெரிய பதவிகளை வகித்த ஆளுநரை பேச அருகதை அற்றவன்


Dharmavaan
ஜன 06, 2025 15:20

முதலில் தேசிய கீதம்தான் பாடப்பட வேண்டும் பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பிரிவினைவாதிகள் நாட்டை துண்டாட நினைப்பவர்கள் திருட்டு திமுக சுடலை தண்டிக்கப்பட வேண்டும் கட்டுப்பாடு இல்லை மத்திய அரசு தன அதிகாரத்தை காட்ட வேண்டும்


Guna Gkrv
ஜன 07, 2025 06:42

வழக்கமாக இருக்கும் கவர்னருக்கக மற்ற முடியாது


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 15:15

ஆளுநர் வந்ததும், போலீஸ் band தேசிய கீதம் தான் வாசிக்கப்பட்டது. அப்புறம் என்ன அவமதிப்பு??


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 15:04

டெல்லி பாஜக விற்கு ஒரு வேண்டுகோள். 2027 வரை கவர்னரை மாற்ற வேண்டாம். ரவி இங்கே இப்படி இருந்தால் தான் பாஜக தமிழ்நாட்டில் எட்டிக் கூடப் பார்க்க முடியாது. பாஜக விற்கு இருக்கிற 3% ஓட்டும் திமுக விற்கு வரும். மீண்டும் ஸ்டாலின் அவர்களுக்கு, இவர் முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு மாற்றவும்.


KumaR
ஜன 06, 2025 15:43

கொத்தடிமைக்கும் கனவு காண உரிமை உள்ளது..


SUBRAMANIAN P
ஜன 06, 2025 16:37

கண்ணிருந்தும் குருடன் வைகுண்டு .


Madras Madra
ஜன 06, 2025 14:25

நீயெல்லாம் அமைச்சர் ஆனது தமிழகத்தின் அவமானம்


S.Balakrishnan
ஜன 06, 2025 14:09

கவர்னர் திராவிட கும்பலை புறம் தள்ளியதை ஜீரணிக்க முடியாத வருத்தத்தில் வழக்கம் போல் துண்டு சீட்டு ராஜாவுக்கு கூஜா தூக்கும் கூட்டத்தின் பிதற்றல் தான் இந்த செய்தியின் சாரம். வாழ்க தமிழ். வாழ்க ஒரிஜினல் தமிழ்த்தாய் வாழ்த்து. தேசியம் ஓங்குக. ஜெய்ஹிந்த்.


புதிய வீடியோ