உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 21ம் தேதி யோகா தினம்; சிறப்பாக கொண்டாட கவர்னர் மாளிகை தீவிரம்

ஜூன் 21ம் தேதி யோகா தினம்; சிறப்பாக கொண்டாட கவர்னர் மாளிகை தீவிரம்

சென்னை : அண்ணா பல்கலையுடன் இணைந்து, சர்வதேச யோகா தினத்தை, வரும் 21ம் தேதி கொண்டாட, கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்து உள்ளது.

இதுகுறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கை:

வரும் 21ம் தேதி, 'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்ற கருப்பொருளில், 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், மக்கள் அனைவரும், யோகா பயிற்சிகளில் முழு மனதுடன் பங்கேற்று, முழுமையான ஆரோக்கியம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பை வலுப்படுத்த வேண்டும். சென்னை அண்ணா பல்கலையுடன் இணைந்து, 2025ம் ஆண்டு சர்வதேச யோகா தின நிகழ்விற்காக, பல்வேறு நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினை கலைஞர்கள் உட்பட பல்வேறு துறைகளிலும், கவர்னர் மாளிகை பங்கேற்பை ஏற்படுத்த உள்ளது.இதற்காக, ஒரு பிரத்யேக இணையவழி சேவையை, கவர்னர் மாளிகை துவக்கி உள்ளது. இதில் பங்கேற்போர், https://events.annauniv.edu/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 70102 57955, 044 - 2235 7343, 044 - 2235 1313 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.Isaac
ஜூன் 17, 2025 10:08

இரவு பகலாக மொழி மத இன குடும்பத்தை காப்பாற்ற ஊழைப்பவர்களுக்கு யோகா தேவையில்லை.


Priyan Vadanad
ஜூன் 17, 2025 07:49

முறையான உடற்பயிற்சியை யோகா என்று அழைக்கிறோம். ஜிம்முக்கு போவதும்கூட ஒரு யோகா பயிற்சியே. இதுக்குபோயி அலட்டிக்கலாமா?


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 11:59

அப்புறம் ஏன் கருணாநிதி BKS ஐயங்காரிடம் யோகாசனங்களை கற்றார்?


Priyan Vadanad
ஜூன் 17, 2025 07:48

வேறு என்னவெல்லாமோ தெரியவில்லை. முறையான உடற்பயிற்சியை யோகா என்று அழைக்கிறோம். ஜிம்முக்கு போவதும்கூட ஒரு யோகா பயிற்சியே.


vivek
ஜூன் 17, 2025 07:48

இதோ வந்துட்டார் fulltime கொத்தடிமை


vivek
ஜூன் 17, 2025 07:45

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க...


Oviya Vijay
ஜூன் 17, 2025 07:03

விடியல் சொம்புகள் ஒவ்வொன்றாக கருத்து தெரிவிக்க வரும் பாருங்கள்...


vivek
ஜூன் 17, 2025 07:47

ஒரு இருநூறு ரூபாய்க்கு எப்படியெல்லாம் முட்டு குடுக்க வேண்டியிருக்கு....பாவம்ய நீரு


vivek
ஜூன் 17, 2025 07:49

திராவிட கூன் விழுந்தவனுக்கு எதுக்கு யோகா....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை