உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாட்டியை கொலை செய்த பேரன்

பாட்டியை கொலை செய்த பேரன்

காரைக்குடி : குடிக்க பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், பாட்டியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு பேரன் கொலை செய்தார். காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் மகபு(65). இவரது கணவர் அப்துல்லா(70). ஓய்வு பெற்ற ஏட்டு. இவரது மூத்த மகன் கனி வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகன் உமர் (48) தாயுடன் தங்கியுள்ளார்.

கனியின் மகன் அசாருதீனும்(24) தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். அசாருதீனும், அவரது சித்தப்பா உமருக்கும் குடிப்பழக்கம் உண்டு.நேற்று அசாருதீனிடம் உமர் பணம் கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்றும், பாட்டியிடம் தான் பணம் உள்ளது அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளும்படி அசாருதீன் கூறியுள்ளார்.

மகபூவிடம் பணம் கேட்டபோது தர மறுத்துள்ளார். இதனால், அசாருதீனுக்கும், உமருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அசாருதீன் தகராறுக்கு பாட்டி தான் காரணம் எனக் கூறி, அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து பாட்டியின் தலையில் போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மீண்டும் கல்லை எடுத்து சித்தப்பா உமர் மீது தாக்கியதில் அவரும் காயமடைந்தார். அசாருதீனை போலீசார் கைது செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ