உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘கிரானைட்’ வீரமணி கார் டிரைவரிடம் விசாரணை

‘கிரானைட்’ வீரமணி கார் டிரைவரிடம் விசாரணை

சென்னை: சிறுமியரை அழைத்து வந்தது தொடர்பாக ‘கிரானைட்’ வீரமணி கார் டிரைவர் பெருமாள் என்ற பாலா 45,விடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘போக்சோ’ வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘கிரானைட்’ வீரமணியின் கார் ஓட்டுனர் பெருமாள் என்ற பாலா. இவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்: வீரமணியிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறேன். வீரமணி, தன் தோழி சாந்தி என்பவரை எனக்கு அறிமுகம் செய்தார். அவரிடம் மட்டும் தொடர்பு கொள்ள, ‘ஸ்மார்ட் போனுடன் சிம்கார்டு’ வாங்கி கொடுத்தார். அந்த எண்ணில் இருந்து வேறு யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி செயல்பட்டேன். சாந்தியால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுமியரை ரகசியமாக வீரமணி இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லும் பணியை செய்து வந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ