உள்ளூர் செய்திகள்

குருபூஜை

கோவை: ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பின் சார்பில் குருபூஜை விழா அன்னூரில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்.சேவை பிரிவு மாவட்ட செயலா ளர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். மாவட்ட பிரசார செயலாளர் ரவிச்சந்திரன் பேசியதாவது: ஆடி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று குருபூஜை விழா நடத்தப்படுகிறது. வேதங்களை அளித்த வியாசர் பிறந்தது இந்த நாளில்தான். பரம்பொருளை அடைவதற்கான இலக்கணத்தை அளித் தவரும் வியாசர் தான். மேற்கத்திய நாடுகள் சுகத்தை நோக்கி சென்றதால், அங்கு குடும்ப அமைப்பு சிதைந்து விட்டது. இந்த பிரபஞ்சம் தோன்றிய போதே தோன்றியது இந்து சனாதன தர்மம். இந்து மதம் என்பது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை வலியுறுத்தும் தத்துவம். பொருளாதார முன்னேற்றம் மட்டும் சமுதாய முன்னேற்றத்துக்கு போதுமானதல்ல. சமுதாயத்தில் அனைத்து துறைகளிலும் பண்புள்ளவர்கள் உருவாக வேண்டும். இவ்வாறு, ரவிச்சந்திரன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ