உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மதரசாக்களில் அமர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: எச்.ராஜா

கோவை மதரசாக்களில் அமர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: எச்.ராஜா

பொள்ளாச்சி: பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: பீஹாரில், கடந்த தேர்தலை விட 9 சதவீதம் அதிகமாக, 65.08 சதவீதம் அளவுக்கு ஓட்டுப்பதிவாகி உள்ளது. இதற்கு காரணம், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி. தேர்தல் கமிஷன் உத்தரவை எந்த கட்சியும், ஆட்சியும் மீற முடியாது. தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு, பயிற்சி பெற்ற பி.எல்.ஓ.,க்கள் நியமிக்கப்படவில்லை. கோவை மாவட்டம் ஆத்துப்பாலம், கிணத்துக்கடவு பகுதியில் 'மதரசா'வில் அமர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை மேற்கொள்ளும் பி.எல்.ஓ.,க்களை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக பேசி வரும் ராகுலுக்கு முழு மருத்துவ பரிசோதனை அவசியம். அவர் உளறியதைக் கேட்டு ஸ்டாலினும் உளறுகிறார். கடந்த 2021ல், ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் சொத்துக்களை மீட்க உத்தரவிட்ட நீதிமன்றம், 'அனைத்து கோவில்களின் மொத்த நிலம்; ஒவ்வொரு கோவில் வாயிலாக பராமரிக்கப்படும் நிலம்; தனியாருக்கு குத்தகைக்கு அளித்த நிலம்; ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் ஆகியவை எவ்வளவு? என, 6 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. ஆனால், தி.மு.க., அரசு, இதுவரை பதில் அளிக்கவில்லை.இதை சொன்னதற்காக, 40 இடங்களில் என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ