உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர் காங்கிரசில் பாதி உறுப்பினர்கள் போலி

இளைஞர் காங்கிரசில் பாதி உறுப்பினர்கள் போலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக இளைஞர் காங்கிரசில் சேர்க்கப்பட்டுள்ள போலி உறுப்பினர்கள், 1 லட்சத்து, 52 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.தமிழக இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், கடந்த ஆண்டு டிச., 29ல் அறிவிப்பு வெளியானது. 'ஆன்லைன்' வாயிலாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டது.உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கைகள், கடந்த ஜன., 18ல் துவங்கி, பிப்., 27ல் முடிவடைந்தன. இதில், தமிழகம் முழுதும், 3 லட்சத்து 82 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில், பெயர், முகவரி, மொபைல் போன் எண்கள் போலியாக தரப்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் எல்லாம் போலி உறுப்பினர்கள் என, உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 1 லட்சத்து, 52 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், சரியான ஆவணங்கள் இல்லாததால் நீக்கப்பட்ட உறுப்பினர்களில் இருந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மீண்டும் சிலரை உறுப்பினராக்கும் யோசனையும் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balasubramanian
மே 15, 2025 12:02

பாதி உறுப்பினர் போலி மீதி உறுப்பினர்கள் தலைவர் கார்கே யை விட இரண்டொரு வயதே குறைந்தவர்கள்!


Yes your honor
மே 15, 2025 10:12

இந்த லட்சணத்தில் குறைவான தொகுதிகளைக் கொடுத்தால் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதாம். ஒருபக்கம் செல்லூர் ராஜு, மற்றோரு பக்கம் ஆவடி நாசர் இவர்களுக்கு நடுவில் மெகா காமெடி பீஸ் தமிழ்நாடு காங்கிரஸ். சார், காங்கிரஸ், திமுக கம்மியான தொகுதிகளை குடுத்தா வாங்கிறாதிங்க..


முக்கிய வீடியோ