துப்பாக்கியை ஒப்படைங்க! உரிமையாளருக்கு அலெர்ட்
திருப்பூர்:இந்திய தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நாட்களில், 'லைசென்ஸ்' பெற்ற நபர்கள், துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடவடிக்கை முடிந்த பின், கடிதம் கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.தேர்தல் அறிவிப்பு வெளியான, 10 நாட்களுக்குள், இந்திய படைக்கல சட்டப்படி, லைசென்ஸ் பெற்ற தனியாரிடம் இருந்து, துப்பாக்கிகள் திரும்ப பெறப்படும். விரைவில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், போலீசார் முன்கூட்டியே தங்களது பணியை துவக்கி விட்டனர்.ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும், துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர் விபரம் பராமரிக்கப்படுகிறது. 'விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பதால், துப்பாக்கியை கொண்டு வந்து ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும்' என, ஒவ்வொரு நபருக்கும் மொபைல் போனில் அறிவுறுத்த துவங்கியுள்ளனர்.