உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனாட்சி கோவிலில் பூஜை செய்ததில் மகிழ்ச்சி: அமித்ஷா

மீனாட்சி கோவிலில் பூஜை செய்ததில் மகிழ்ச்சி: அமித்ஷா

மதுரை: மதுரை மீனாட்சி கோவிலில் இன்று பூஜை செய்ததில் மகிழ்ச்சி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.ஒத்தக்கடை பகுதியில் இன்று( ஜூன் 08) நடந்த பா.ஜ.,நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரை வந்தார். அவரை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a0ocdquy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை, , மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சால்வை அணிவித்து வரவேற்றார். மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதனைத் தொடர்ந்து அமித்ஷா எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று பூஜை செய்ததில் மகிழ்ச்சி. நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், நமது குடிமக்களின் நல்வாழ்விற்கும் அன்னையின் ஆசிகளைப் பெற்று பிரார்த்தனை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரும் காலம் நமதே

முன்னதாக, மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ., மையக் குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்தது. இதில் தமிழக பா.ஜ., முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதில் அமித்ஷா பேசும் போது, நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். வரும் காலம் நமதே. கூட்டணி கட்சிகளுடன் நட்பு பாராட்ட வேண்டும். மாவட்ட, மண்டல வாரியாக மக்கள் பிரச்னைகள் கண்டறிந்து களப்பணியாற்ற வேண்டும் எனக் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் தே.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Aruns Sankar
ஜூன் 08, 2025 23:33

மீனாட்சி அம்மன் கோவில் என்று எழுதலாமே


Thravisham
ஜூன் 08, 2025 22:00

எக்காலத்திலும் எழுந்திரிக்க வாய்ப்பில்லா சம்மட்டியடியை மக்கள் வித்தவுட் குடும்ப கம்பெனி கட்சிக்கு கொடுக்க வேண்டும்


Raja
ஜூன் 08, 2025 18:06

திரு.அமித்ஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... ஆனால்... கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி வைத்திருப்பது போல் அதிமுக-பி.ஜே.பி. கூட்டணியை பலவீனமாக்க முயற்சி செய்யும் திமுகவின் ஸ்லீப்பர் செல் கட்சிக்குள் வைத்திருப்பது ஆபத்தானது.


சிந்தனை
ஜூன் 08, 2025 16:50

இப்பொழுது தெய்வங்களை தேடும் அமைச்சர்களை பார்க்கிறோம் நம்பிக்கை பிறக்கிறது வாழ்க பாரதப் பண்பாடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை