உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 44 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு தான் செல்கிறது: அண்ணாமலை கேள்வி!

44 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு தான் செல்கிறது: அண்ணாமலை கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு?', என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழக தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0buuoklb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் தி.முக. அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு?, இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

SRITHAR MADHAVAN
ஜன 07, 2025 14:30

திமுக அரசியல்வாதிகள் நடத்தும் அனைத்து பள்ளிகளையும் தணிக்கை செய்யுங்கள், தெரிய வரும்.,


Guna Gkrv
ஜன 06, 2025 10:35

கருத்து சொல்லுபவர்கள் செய்தியை நன்றாக தெரிந்துகொண்டு பிறகு விமர்சனம் செய்யுங்கள் சும்மா வாயில் வைத்தெல்லாம் அடித்துவிடக்கூடாது,


Shreyas
ஜன 02, 2025 19:21

பி எம் கேர்ஸ் நிதியில் எவ்வளவு வசூல் ஆனது ?எவ்வளவு செலவு செய்யப்பட்டது ?என்ற கணக்கை முதல்ல சொல்லுங்க...அப்புறம் மற்ற கணக்கை கேட்கலாம்


Dharmavaan
ஜன 03, 2025 10:23

ராகுல் கான் சீனாவிடம் த்ருஷ்டியூக்கு வாங்கின லஞ்சம் பற்றி கேள் அவன் போட்ட அக்ரீமெண்ட் விவரம் என்ன நாட்டை சீனாவுக்கு விற்ற விவரம் என்ன கேள்


venugopal s
ஜன 02, 2025 13:58

தமிழக அரசின் பட்ஜெட்டை ஒழுங்காக படித்துப் பார்த்தால் தெரியும், இவருக்கு படிக்கத் தெரியுமா?


Anand Muthiah
ஜன 02, 2025 12:30

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது போல் ஒரு பொய்ச் செய்தி உருவாக்கப்படுகிறது.. அரசோ அமைச்சரோ எந்த உத்தரவும் அவ்வாறு கொடுக்கவில்லை.. செய்தியின் உண்மைத் தன்மையை அறிய அமைச்சர் Anbil_Mahesh அவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை… ஆனால் மிக வேகமாக கண்டனங்கள் வீசப்படுகின்றன.. தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களின் CSR நிதியில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவத் தயார் என்று சொன்னதை திரித்து விட்டனர்.. இதோ அச்சங்கத்தின் விளக்கம்.. அந்த விழாவில் அமைச்சர் பேசியதையும் பார்த்தேன்… அரசுப் பள்ளிகளுக்கு CSR நிதியில் இருந்த உதவ தாங்கள் தயாராக இருப்பதாக தனியார் பள்ளி சங்கத்தினர் தெரிவித்த கருத்திற்கு நாகரீகத்தோடு நன்றி கூறுகிறார் அமைச்சர். அவ்வளவே. மிகச் சமீபத்தில்தான் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் வெளி நாடு சென்று வந்தனர்.. உயர்வுக்குப் படி என்ற திட்டம் இடை நிற்றலை இல்லாமல் ஆக்கியுள்ளது.. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. தமிழக பள்ளிக் கல்வித்துறை மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது.. அதை பாராட்ட மனமில்லாத கூட்டம் சேற்றை வாரி இரைப்பது கண்டிக்கத்தக்கது..


Ganapathy Subramanian
ஜன 02, 2025 14:41

தங்களுக்கு இன்றைய பேட்டா இரு மடங்கா?


Dharmavaan
ஜன 03, 2025 10:25

CSR நிதியிலிருந்து கொடுக்க வேண்டிய தேவை என்ன பிரதி பலன் இல்லாமலா இது ஒரு நாடகம் ஊரை ஏமாற்ற


Tetra
ஜன 02, 2025 11:23

கொடுத்த பணம் என்னாச்சுன்னு கேட்டா ஏதோ 200₹ வெளக்கெண்ணை பதில்.


Ganapathy Subramanian
ஜன 02, 2025 10:38

சென்ற வருடம் வெளிவந்த தனுஷின் வாத்தி படம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இவர்களுக்கு ஐடியா கொடுத்தது அந்த படமாக இருக்குமோ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 09:46

நாங்க சுருட்டுறதுக்கு வசதியா, நாங்க கேக்குற அளவுக்கு ரெகுலரா நிதி கொடுத்தீங்கன்னா கொஞ்சம் டீசண்ட்டா பேசுவோம் .... இல்லன்னா வாயத்தொறந்தா நாக்கே கூச்சப்படுற அளவுக்கு கலீஜா பேசுவோம் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 09:44

கணக்கு கேட்டா எங்களுக்குப் பிடிக்காது... எம்ஜிஆர் ஐ கூட கணக்கு கேட்டதால்தான் வெளியேற்றினோம் என்பது நினைவிருக்கட்டும் ...


N.Purushothaman
ஜன 02, 2025 12:13

கணக்கு கேட்டால் அவன் வூட்டுக்கு ஆட்டோ அனுப்புவோம் ...இது திராவிட மாடல் ஹே ....


jss
ஜன 02, 2025 08:50

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள என்றால் , துண்ணுகுட்டிருக்காங்க என்ற பதில் ஊழலுன் மொத்த வடிவம் திராவிடஅரசுகள்.