உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய மனு கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய மனு கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை : சிவகங்கை வாரச்சந்தை ரோடு பிள்ளையார்கோவில் தெருவிலுள்ள அ.தி.மு.க., பிரமுகர் கதிரேசனின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனு குறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியது.

சிவகங்கையை சேர்ந்த வசந்தி தாக்கல் செய்த ரிட் மனு : என் வீட்டுக்கு இரு வாசல்கள் உள்ளன. மெயின் ரோடு மற்றும் தெற்குபக்கம் பத்து அடி பொது பாதை ஆகியவற்றில் இந்த வாசல்கள் உள்ளன. பத்து அடி பொது பாதையை அ.தி.மு.க., பிரமுகர் கதிரேசன் ஆக்கிரமித்துள்ளார். இதை தட்டி கேட்பவர்களை மிரட்டுகிறார். வீட்டின் முன்பகுதியை டாஸ்மாக் மதுக்கடை பாருக்கு அவர் வாடகைக்கு விட்டிருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பொது பாதையை பயன்படுத்தும் குடியிருப்போரை கதிரேசன் மிரட்டுகிறார். பிள்ளையார் கோவில் தெரு சர்வே எண் 38ல் உள்ள கதிரேசன் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர், தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார். மனு குறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்க கலெக்டர், தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி