நிலம் வழங்கியர் பெயரை கட்டடத்திற்கு சூட்டலாம் :ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியவர் பெயர்களை கட்டடத்திற்கு சூட்டலாம் என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.ராமநாதபுரம், பட்டணம்காத்தான் மோகன் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை, வலங்காபுரி ஊராட்சிக்கு துவக்கப்பள்ளி கட்ட, தானமாக வழங்கினேன். பள்ளி கட்டடம் கட்டினால், சேதுராமநாடார் - வெள்ளியம்மாள் பெயர் சூட்ட கோரிக்கை வைத்தேன். ஆனால், அரசு விதிகளில் இடமில்லை என, பெயர் சூட்ட அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதை ரத்து செய்து பெயர் சூட்ட உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுதாகர், ''பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியர் குறிப்பிடும் பெயரை கட்டடத்திற்கு சூட்டலாம்,'' என, உத்தரவிட்டார்.