உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதி: தமிழகத்துக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதி: தமிழகத்துக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.இ.,) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.ஈஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், 'தமிழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டு துவங்கப்படவில்லை. இந்த திட்டம் முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது' எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணை நடத்தி வருகிறது.அப்போது, தமிழகத்துக்கான நிதியை ஒதுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், சில காரணங்களினால் தரப்படவில்லை,' என விளக்கம் அளித்தார்.அது ஏன் என நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்ப, அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், 2021 முதல் 2023 கல்வியாண்டு வரை மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்காததை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி., கூட கிடைக்காத காரணத்தினால் நிதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதனை தொடர்புப்படுத்தக்கூடாது.இந்த நிதியை வழங்காத காரணத்தினால், தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 11:29

இப்போ இந்த நிதி அத்தனையும் தனியார் CBSC பள்ளிகளுக்குச் செல்லும். CBSC பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றுபவை. ஆக தி.மு.க அரசு மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையை திணிக்க துவங்கியுள்ளது பாராட்டத்தக்கது.


குரு, நெல்லை
ஜூன் 11, 2025 07:23

இது எந்த மாதிரியான கேள்வி என்று எனக்குப் புரியவில்லை. இங்கே உள்ள திராவிட மாடல அரசு எதற்காக அரசு பணத்தினை எடுத்து தனியார் பள்ளிக்கு கொடுக்க வேண்டும். இவர்கள் இங்கே புதிய கல்விக் கொள்கையை அரசாங்க பல்கலை பள்ளிகளில் அறிமுகப்படுத்தினால் ஏழை மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடி செல்ல போகிறார்கள். யாருடைய வரி பணத்தை எடுத்து யாருக்கு செலவிடுவது. தனியார் பள்ளி சேர வேண்டும் என்று யார் கேட்டார்கள். இங்கே முறையாக கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதய பள்ளிகள் துவங்கியிருந்தால் இந்த நிலைமை ஏழை மக்களுக்கு வந்திருக்காது இவர்கள் குழந்தைகள் புதிய கல்வி கொள்கையை பின்பற்றி இருப்பார்கள். எல்லோரையும் முட்டாளாக்குகிறது இந்த நீதிமன்றம். டாஸ்மாக்கில் அடுத்த பிள்ளையின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசாங்க பள்ளிகளுக்கும் தலா இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எல்லாவற்றையும் சுரண்டித் தின்னும் இந்த பிணந்தின்னி அரசு ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் மல்லுக்கட்டு நிற்கின்றது. இந்த 2000 கோடி கூட இல்லாமல் ஏன் இவர்கள் ஆட்சி செய்ய வேண்டும்.


N Sasikumar Yadhav
ஜூன் 10, 2025 21:13

பேசாமல் உச்சநீதிமன்ற கிளையை அண்ணா அறிவாலய வாசலில் திறந்து விட்டால் நன்றாக இருக்கும் . இதுபோன்ற தீர்ப்புகளை திராவிட மாடல் நிர்வாகி ஆர்எஸ் பாரதி சொன்ன கோட்டாவில் வந்தவர்கள் கொடுத்திருப்பார்களோ


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 10, 2025 22:50

இது தான் ஸ்டாலின் , நீதித்துறை யின் காவலன் , எல்லா வழக்குகளும் வெற்றி , ஸ்டாலின் is மோர் dangerous than கருணாநிதி என்று நிரூபித்து கொண்டு இருக்கிறார்


GMM
ஜூன் 10, 2025 21:00

நிதியை வழங்காத காரணத்தினால், தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்ற நீதிபதியின் கவலை புரியவில்லை. தனியார் பள்ளி தற்போது பணம் பறிக்கும் பள்ளி? குறைந்த சம்பளம். போலி கணக்குகள். வரி சலுகை பெற்று ஏமாற்றும் பள்ளி? 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு சலுகை பெற தான். ? சலுகை பெறும் மாணவர்கள் சான்றில் அரசு பணம் பதிய வேண்டும். வருவாய் ஈட்டி வாழும் போது வசூலிக்க வேண்டும். இதில் என்ன தவறு. திராவிடம் மசோதா தாக்கல் செய்யுமா?


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூன் 10, 2025 20:55

இதை தானே தமிழ்நாடு அரசு கேட்டது. நீதிமன்றங்களில் கொட்டு வாங்குவதே ஒன்றிய அரசின் வேலையாகிவிட்டது


GMM
ஜூன் 10, 2025 20:52

மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி., கூட கிடைக்காத காரணத்தினால் நிதி வழங்கப்படவில்லை என்ற மத்திய அரசு வழக்கறிஞர் வாதம் மிக தவறு. நிதி மறுக்க வேறு சில காரணங்கள் உண்டு. அதனை மறைத்து விட்டார். தனியார் பள்ளியில் பணம் பெற்று வாதிட்டது போல் தெரிகிறது. மத்திய அரசுக்கு எதிரானது. இதனால் தீர்வு அரசு நோக்கி திரும்பி விட்டது.


ஆரூர் ரங்
ஜூன் 10, 2025 20:29

இந்த நிதி முழுவதும் தனியார் பள்ளிகளுக்குதான் போகும். அவர்களுக்கு உதவ மாநில அரசு வழக்கு? RTE சட்டமே நியாயமானதல்ல. கல்வியை அளிக்க வேண்டிய கடமையைச் செய்யவேண்டிய அரசு வணிக கல்விக் கூடங்களிடம் மாணவர்களை அனுப்பி வரிப்பணத்தில் கட்டணமும் கட்டுவது அநியாயம்.


visu
ஜூன் 10, 2025 19:39

மத்திய அரசு வழக்கறிஞர் ஏதும் வாதாடியதாகவே தெரியலையே


Krishnamurthy Venkatesan
ஜூன் 10, 2025 19:15

மத்திய அரசு வக்கீல் விலை போய் விட்டாரா? சரியான வாதங்களை முன் வைக்காதது ஏன்?


தாமரை மலர்கிறது
ஜூன் 10, 2025 19:11

ஹை கோர்ட் போடுகிற உத்தரவெல்லாம் மாநில அரசுக்கு தான். மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் மட்டும் தான் ஆர்டர் போடமுடியும். மும்மொழிக்கொள்கையை கொண்டு வராதவரை, தமிழகத்திற்கு பத்து பைசா கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை