உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க கூடாது: வீட்டுவசதி வாரியத்திற்கு ஐகோர்ட் குட்டு

கூடுதல் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க கூடாது: வீட்டுவசதி வாரியத்திற்கு ஐகோர்ட் குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வீடு விற்பனையில் முறையான அறிவிப்பின்றி கூடுதலாக, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்தும்படி, தமிழக வீட்டுவசதி வாரியம் நிர்ப்பந்திக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நந்தனம் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில், 2021ம் ஆண்டு உயர் வருவாய் பிரிவினருக்கான இரண்டு குடியிருப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை, தமிழக வீட்டுவசதி வாரியம் வெளியிட்டது. நந்தனத்தில் 102, அண்ணா நகரில், 72 குடியிருப்புகள் கட்டப்பட்டன. வீட்டின் விலையுடன் ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றை, வீட்டு வசதி வாரியம் விளம்பரம் செய்தது. இந்த திட்டங்களில் வீடு வாங்கியவர்கள் அறிவிப்பில் வெளியிட்ட விலையை, பல்வேறு தவணைகளில் செலுத்தினர். இதையடுத்து, கூடுதலாக 5 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தும்படி வீட்டு வசதி வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்த அறிவிப்பை அடுத்து, ஒதுக்கீடு பெற்றவர்களில் சிலர் கூடுதலாக கோரிய, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை செலுத்தினர். கூடுதலாக கோரிய வரியை செலுத்த மறுத்த ஒதுக்கீடுதாரர்கள் ஹம்சா சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:தமிழக வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட விளம்பரத்தில், வீட்டின் விலை, ஜி.எஸ்.டி.,-யையும் உள்ளடக்கியது என, வெளிப்படையாக கூறப்பட்டு உள்ளது. அத்துடன், ஒதுக்கீட்டு கடிதத்திலோ அல்லது வாரியம் - ஒதுக்கீடுதாரர் இடையேயான ஒப்பந்தத்திலோ, இதற்கு முரணாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.விளம்பரத்தில் நந்தனம் திட்டத்தில் சதுர அடிக்கு ஜி.எஸ்.டி., சேர்த்து, 9,462 ரூபாய்; அண்ணா நகர் திட்டத்தில் ஜி.எஸ்.டி., சேர்த்து, சதுர அடிக்கு 10,500 ரூபாய் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது.வாரியத்தின் வரி திட்டமிடல் பிழைகளுக்கு, வீடு வாங்கியவர்களை பொறுப்பேற்க வைக்க முடியாது. அறிவிப்பில் அளித்த வாக்குறுதியை வாரியம் மீறியதோடு, மேலாதிக்க நிலையில் செயல்படுவதையே காட்டுகிறது. எனவே, வீடுக்கான விற்பனை விலையை செலுத்திய அனைத்து மனுதாரர்களுக்கும், எட்டு வாரங்களுக்குள் வீட்டுவசதி வாரியம் விற்பனை பத்திரத்தை வழங்க வேண்டும். கூடுதலாக, 5 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தியவர்களுக்கு, அந்த தொகையை வாரியம் திருப்பி தர வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ravi Kumar
ஜூன் 09, 2025 10:20

அரசு அதிகாரிகள் இ.ஆ .ப . I.A.S. மற்றும் T.N.P.S.C., ANNA UNIVERSITY ENGINEER, எல்லாம் வேலை திறமையாக செய்யவில்லையா ? கணக்கில் அதுவும் அரசாங்க வரியில் . தூங்குமூஞ்சி பணியாளர்கள்.... உயர்நிதி மன்றம் கூறியது சரி .


Kanns
ஜூன் 09, 2025 09:10

Good-Bold Judgement Against PowerMisusing RulingPartyGovts& their StoogeOfficials


GMM
ஜூன் 09, 2025 06:49

வாரியத்தின் வரி திட்டமிடல் பிழை திருத்திற்கு உட்பட்டது. வரி இழப்பை ஈடு செய்ய பிழையை திருத்தம் செய்ய வேண்டும். வீடு வாங்கியவர்கள் வரி பொறுப்பேற்பது தவறு அல்ல. வரி விதிகள் மற்றும் தேச பாதுகாப்பு விவகாரங்களில் நீதிபதியின் தலையீடுகள் இருக்க கூடாது. நீதிபதிக்கு தேச, சட்ட பார்வைகள் தான் இருக்க வேண்டும். ஓட்டு வாங்க சலுகை, கருணை, இலவசம் அரசியல் வாதிகள் பார்வைக்கு உட்படும். தவறான உத்தரவு.?


Dharmavaan
ஜூன் 09, 2025 08:37

அரசு தனியாரை விட நாணயமாக இருக்க வேண்டும் ஆனால் தனியாரை விட ஏமாற்று கூட்டமாக இருக்கிறது பண வெறி பிடித்து சமூக சேவை என்று பெயரில் ஏமாற்றுகிறது


A.C.VALLIAPPAN
ஜூன் 09, 2025 09:49

Hello Dear when you make rule or when you make price you should think 100 times that time you will think about Tea , coffee and Bonda or at your free time you are making rule then you will ge to customer how it is possible. you will give price as per list not as you think . just think before writing.


V Venkatachalam
ஜூன் 09, 2025 15:03

நீதிபதி சரியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார். வீட்டு வசதி காரனுங்களுக்கு மண்டையில் மூளை கிடையாதா? இவனுங்க இன்னும் 10 வருஷம் கழிச்சு மறுபடியும் ஏதாவது கழிசடை வரின்னு நோட்டீஸ் கொடுப்பானுங்க. அதுக்கெல்லாம் வீடு வாங்கினவன் கட்டி அழணுமா?


Kasimani Baskaran
ஜூன் 09, 2025 06:45

நிதி மற்றும் நீதி நெருக்கடியை தவிர்க்க கூடுதலாக வசூலித்து கொடுத்தவர்களை தொங்கோ தொங்கு என்று தூங்கினாலும் செலுத்திய தொகையை திரும்ப வாங்கமுடியாது... புது வகை மோசடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை