உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவருக்கு வேலை இல்லை...! ஏதாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாரு...! இ.பி.எஸ்.,ஐ சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அவருக்கு வேலை இல்லை...! ஏதாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாரு...! இ.பி.எஸ்.,ஐ சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு வேலை இல்லை. அவர் ஏதாவது சொல்லி கொண்டுதான் இருப்பாரு... அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை' என முதல்வர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் பதில் அளித்தார்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: மதுரையில் சில இடங்களில் மட்டுமே மழையால், பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.சென்னையில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9e59d0fy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. 2 அமைச்சர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இன்னும் 8 பகுதிகளில் தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்றும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். சென்னையில் இருந்து அதிகாரிகளை அனுப்பியுள்ளோம்; நிவாரணப் பணிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர்கள் கேள்வி!

பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் அரசு கடன் வாங்கிதான் கொடுக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

முதல்வர் பதில்!

இதற்கு, முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில், 'அவரு சொல்லிகிட்டு இருப்பாருங்க, அவருக்கு வேற வேலை கிடையாது. அவர் பெயர் தினமும் பத்திரிகைகளில் வர வேண்டும். அவர் முகம் அடிக்கடி டிவியில் வர வேண்டும். இதற்காக அவர் ஏதாவது சொல்லி கொண்டு இருப்பாரு...அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 26, 2024 22:57

2011லிருந்து 2021 வரை நீங்க பேசினீர்களே அது வேலையில்லாமல் தான் பேசினீர்களா.....??? இருமினா ல் போராட்டம் தும்மினால் ஆர்பாட்டம்.... அரசினால் ஏற்படும் கண்களுக்கு புலப்படாத சிறு தவறுகளை கூட தனது அடிமை ஊடகங்களை வைத்து பூதாகரமாக காட்டி அரசை செயல்பட முடியாதபடி செய்தீர்களே.... அது என்ன வேலையில்லாமல் செய்ததா???


Matt P
அக் 26, 2024 20:50

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுக்கப்படுகிறதா? ,,பதில் சொல்ல முடியாமல் தவித்த முதலு உளறி விட்டார்.


Ramesh Sargam
அக் 26, 2024 20:49

சரி, அவருக்குத்தான் வேலை இல்லை, ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு வேலை இருக்கா இல்லையா? இருந்தால் அதில் கவனம் செலுத்த வேண்டியதுதானே. ஏன் அவர் பேச்சுக்கு எதிர்மறையாக ஏதாவது பதில் கூறிக் கொண்டிடிருக்கிறீர்கள்? அப்படி என்றால் உங்களுக்கும் வேலை எதுவும் இல்லையா?


Matt P
அக் 26, 2024 20:20

தமிழ்நாட்டிலுள்ள ஓவ்வொரு குடிமகனின் கருத்துக்கும் மரியாதை கொடுப்பவர் தான் தமிழ் நாட்டின் முதல் மந்திரி பதவிக்கு தகுதியானவர். குறிப்பாக எதிர் கட்சி தலைவரின் குரலுக்கு.


Matt P
அக் 26, 2024 20:18

பொறுப்பான முதல்வர் பேசும் பேச்சா இது? வீட்டில் ரொம்ப வயசான மனுஷன் இருந்தால் இப்படி தான். சில மனைவிகள் பேசி கொள்வார்கள். வயசான காலத்தில தொண தொணன்னு பேசிகிட்டே ....எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் காண்பதறிவு ...எதிர்க்கட்சி தலைவர் என்பவர் ஆட்சியில் இல்லாவிட்டாலும் முதல் அமைச்சருக்கு இணையானவர். அவரும் அரசின் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார். அவர் மக்களின் பிரதிநிதி. அரசியல் முதிர்ச்சியின்மையை தான் காட்டுகிறது இவர் பேச்சு. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாட்டு முதல் மந்திரியின் பேச்சுக்களையும் செயல்களையும் கவனித்து வைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் கருத வேண்டும்.


சாண்டில்யன்
அக் 26, 2024 20:12

"ஹைய்யா நம்ம பொது செயலாளருக்கு ஸ்டாலினே பதில் சொல்றாருன்னா பாத்துக்கோங்கன்னு" புளகாங்கிதம் அடைஞ்சாங்களே அம்புட்டுதானா?


PR Makudeswaran
அக் 26, 2024 19:39

சரி அவர் ஒரு புறம் இருக்கட்டும். ஸ்டாலின் சொல்வது எல்லாம் அரிச்சந்திரனை போல் உண்மைகள். முழுவதும் poi. இயற்கை பழி தீர்க்காமல் விடாது. பழைய அரசியல்வாதிகள் பட்டதெல்லாம் ஞாபகம் இருந்தால் சரி.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 19:04

ஆமா ..... இவருதான் மக்கள் பணியில் மிகவும் பிசி ........


D.Ambujavalli
அக் 26, 2024 18:57

இவர் அன்று எதிர்க்கட்சியில் செய்த ‘அவியலை ‘ இவர் இன்று செய்கிறார் நாளை அவர் வருவார், இவர் முறை வரும் யாருக்கும் வேலையில்லை என்பதுதான் உண்மை


GoK
அக் 26, 2024 17:52

ஐயோ இவருக்கு எவ்வளவு வேலை செயலர்கள் எழுதும் கடிதங்களில் கையெழுத்து போடணுமே, திராவிட வளக்கணுமே, ஆரியம் ஒழிக்கணுமே ...முதல்ல அவை என்னனு கண்டுபிடிக்கணுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை