உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில் போட்டி காரணமாக கட்சி ஆரம்பித்துள்ளார்: விஜயை மறைமுகமாக சாடும் ஆர்.எஸ்.பாரதி

தொழில் போட்டி காரணமாக கட்சி ஆரம்பித்துள்ளார்: விஜயை மறைமுகமாக சாடும் ஆர்.எஸ்.பாரதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தொழில் போட்டி காரணமாக ஒருவர் கட்சி ஆரம்பித்து உள்ளார். மக்களுக்காக அல்ல'', என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ் பாரதி பேசியதாவது: தி.மு.க., தனது பெருந்தன்மையை பல முறை நிரூபணம் செய்துள்ளது. வரலாறு தெரியாதவர் எல்லாம், நேற்று முளைத்தவர் எல்லாம் சவால் விடுகிறார். எல்லாம் காலக்கொடுமை. ஆனால் ஒன்று, தி.மு.க.,வை எதிர்த்தவர், எதிர்க்க நினைத்தவர் மண்ணோடு மண்ணாகி இருக்கிறார்கள். நான் சாபம் விடவில்லை. வரலாற்றை சொல்கிறேன். தி.மு.க., செய்ததை மக்கள் யாரும் மறந்துவிட முடியாது.நேற்று ஒருவர் அதிகம் பேசி உள்ளார். மன்னராட்சி என ஒருவர் பேசுகிறார். இது குடியரசு நாடு. தேர்தலில் நின்று மக்கள் ஓட்டுப்போட்டு , பெரும்பான்மை பெறுகிற கட்சி தான் ஆட்சி செய்ய முடியும். இதுகூட தெரியாத முட்டாள்கள் எல்லாம் பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மக்களை சந்தித்து ஓட்டு பெற்று பெரும்பான்மை கட்சி மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். திராவிடம் என்ற சொல் எங்கும் ஒலிக்கிறது. இதை தாங்கி கொள்ள முடியாத கூட்டம் கண்டபடி பேசுகிறது.தொழில் தகராறு காரணமாக ஒருவர் கட்சி ஆரம்பித்து உள்ளார். இதெல்லாம் உருப்படுமா. மக்களுக்காக ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.பிறகு சென்னை ராயப்பேட்டையில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணி உறுதியாக உள்ளது. எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. வி.சி.க., தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கும். கூட்டணி கணக்கு மைனஸ் ஆகாது. அப்படி சொன்னவர்தான் மைனஸ் ஆவார். திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

கல்யாணராமன் மறைமலை நகர்
டிச 08, 2024 12:17

யப்பா, பாரதி ஓட்டுக் கேட்கும்போது வெற்றி பெற்றால் உதயநிதி துணை முதல்வராவார் என்று கூறியா ஓட்டு கேட்டீர்கள்?


தமிழ்வேள்
டிச 08, 2024 10:53

திராவிட தொழில் மறைவான இருளான இடங்களில் ஆள் பிடிப்பது.. உள்ளதை பிடுங்கி விட்டு ஓட்டம் பிடிப்பது..ஆலந்தூரார் தொழில் போட்டி என சொல்வது சரியே... இந்த மாதிரியான தொழில் போட்டியாளர்களை துவக்க நிலையிலேயே சரியாக மோப்பம் பிடித்து அறிவது அந்த தொழிலில் கொட்டை போட்டவர்களுக்கு மட்டுமே உள்ள திறமை.. பாம்பின் கால் பாம்பறியும்.. திமுகவின் ஆதிமூலத் தொழில் அதில் உள்ளவர்களுக்கே நன்றாக தெரியும்.


Murthy
டிச 08, 2024 03:02

ஆம் திமுக என்ற சினிமா கம்பெனிக்கு போட்டியாக.....


aaruthirumalai
டிச 07, 2024 23:39

திமுக வின் அடாவடிக்கு விரைவில் முடிவு எட்டப்படும். பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து திமுக வுக்கு முடிவு ஆரம்பிக்க பட்டுள்ளது.


Ramesh Sargam
டிச 07, 2024 22:38

ஊழல் தொழிலில் திமுகவை யாரும் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது.


bala
டிச 07, 2024 22:20

தலைமுறை தலைமுறையாக நீங்க சொம்பு தூக்கி பழகிடிங்க..அதனால் உனக்கு மன்னராட்சி என்றால் புரியவில்லை..200 rs சொம்பு நக்கி.கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி,அப்புறம் பெண்டனிதி எல்லாருக்கும் நீங்க தான தொண்டர்கள்


ManojGandhi
டிச 07, 2024 21:56

தொழில் போட்டி என்று கூறிய ஐயாவை வன்மையாக கண்டிக்கிறேன். ௨ங்களுக்கு தைரியம் இருந்தால் பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியுமா.


adalarasan
டிச 07, 2024 21:55

உண்மைதான். அவருடைய ப டம் ரிலீஸ் செய்யும் நேரத்தில் ஓவ்வொரு முறையும், தொந்திரவு கொடுத்து காய்ப்புணர்ச்சியை காட்டியதின்,அரசியல் [பலத்துடன் ], விளைவு தான் ,அவரை கட்சி ஆரம்பிக்க துரித படுத்தியது ?


பேசும் தமிழன்
டிச 07, 2024 21:49

இவர் பேசுவதை கேட்டால்.... வாயால் சிரிக்க மாட்டார்கள்.... வேண்டுமானால் சின்ன தத்தி.... படத்தை யாருமே பார்க்காததால் அரசியலுக்கு வந்து இருக்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 21:40

திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு அல்ல சொல்கிறார் திருமா ...... திருமாவை நாதக தனது பக்கம் இழுக்கிறதா ????


புதிய வீடியோ