உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை எதிரொலி; பள்ளி விடுமுறை பற்றி இன்று மாலை அறிவிப்பு

கனமழை எதிரொலி; பள்ளி விடுமுறை பற்றி இன்று மாலை அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 300 நிவாரண முகாம்கள் மற்றும் 130 படகுகள் தயாராக உள்ளன; பள்ளி விடுமுறை பற்றி இன்று மாலை முதல்வர் அறிவிப்பார் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தண்ணீர் தேங்கியுள்ளதால் இரண்டு சுரங்க பாதைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 8 இடங்களில் மரம் முறிந்து விழுந்து உள்ளது. அவற்றை அகற்றும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ur6n69mw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கி வருகிறோம். சென்னையில் 89 படகு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு மணி நேரம் மழை நின்றால், கணேசபுரம், பெரம்பூர் சுரங்க பாதையில் தேங்கி மழை நீர் வெளியேற்றப்படும். சென்னைக்கு உதவ தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.பள்ளி விடுமுறை தொடர்பாக இன்று மாலைக்குள் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். மழை எச்சரிக்கை தொடர்பாக ஆய்வு செய்த பின் விடுமுறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். திருவள்ளூரில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு உதயநிதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Tiruchanur
அக் 15, 2024 16:03

The vidiyal ஆட்சி. மூன்றாண்டு வெள்ளமே ஸாக்ஷி


angbu ganesh
அக் 15, 2024 15:10

எனக்கு ஒரு சந்தேகம் இவர் துணை முதல்வரா இல்ல முதல்வரா


sundarsvpr
அக் 15, 2024 13:35

முதல்வர் மாலையில் அறிவிப்பார் என்றால் எந்த கல்லூரி முதல்வர் என்பதனையும் கூறினால் நலமாய் இருக்கும். நமக்கு அறிவிக்க வேண்டியது தமிழ்நாட்டு மாநில தலைமைஅமைச்சர். அவர் எப்போது அறிவிப்பார் என்ற விபரம் தெரிவித்தால் நல்லது. இப்படிதலைமை அமைச்சர் ஒருவர் இருப்பதாக நாளிதழ்கள் கூறவில்லை.


sivakumar Thappali Krishnamoorthy
அக் 15, 2024 13:28

அரசு ஊழியர்கள் மந்திரிகளுக்கு அசிஸ்டன்ட் தானே.. கவர்னர் ஆட்சியா நடக்குது ?


nagendhiran
அக் 15, 2024 13:24

தாத்தா காலத்தில் இருந்தே இந்த நாடகம் பார்த்தாச்சி? அப்பா போய்? இப்பொ இவர்? இன்னும் இவர நம்பும் மக்களைதான் சொல்லனும்? ஆடு கசாப்புகாரனைதான் நம்பும்?


Training Coordinator
அக் 15, 2024 13:07

அரசின் எல்லா நடவடிக்கைகளையும் குறை சொல்வதை நிறுத்தி கொண்டால் நல்லது.


Tiruchanur
அக் 15, 2024 16:02

The vidiyal ஆட்சி. மூன்றாண்டு வெள்ளமே சாக்ஷி. நிமிஷத்துக்கு நிமிஷம் "இது த்ராவிட ஆட்சி" ன்னு எவன் மார் தட்டிக்க சொன்னான்? இப்போ எல்லா கருத்துகளையும் குற்றச்சாட்டுகளையும் கேட்டுக்கதான் வேண்டும்.


Ramesh Sargam
அக் 15, 2024 12:47

உதய நிதி படகு சவாரி விட இடம் தேடுகிறார் போல தெரியுது.


Ramesh Sargam
அக் 15, 2024 12:46

பார்த்து மேயர் பெண்மணியின் லிப்ஸ்டிக் அழிந்துவிடப்போகுது...


M S RAGHUNATHAN
அக் 15, 2024 12:44

எதற்கு பள்ளி பற்றி முதல்வர் முடிவு எடுக்கவேண்டும். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்க கூடாதா? கல்வி மந்திரி ஏதாவது தடை போட்டு இருக்கிறாரா? இம்மாதிரி நிர்வாக முடிவுகள் எடுப்பதற்குத் தான் ஆட்சியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிர்வாக திறமையை அரசின் மந்திரிகள் ஏன் பார்க்க மறுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் என்ன office assistants ஆ? DMK வின் நிர்வாகத் திறமை மோசம் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.


புதிய வீடியோ