உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 நாட்களுக்கு சுள்ள்ள் கண்ணாமூச்சியாகும் மழை

4 நாட்களுக்கு சுள்ள்ள் கண்ணாமூச்சியாகும் மழை

சென்னை:'தமிழகத்தின் சில பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கக் கூடும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாமக்கல்லில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலா, 4; மேல் கூடலுார், செருமுள்ளி, கூடலுார் பஜார், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இடங்களில், தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, வடமேற்கு வங்கக்கடலில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில், ஒடிஷா நோக்கி நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்., 8 வரை, தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி