உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, வேலூர், கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை, வேலூர், கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், சென்னை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் கோடை காலம் துவங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தனர். காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இச்சூழ்நிலையில் இன்று (மே 08) அதிகாலை முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.சென்னையில் அதிகாலை நேரத்தில் தரமணி, அடையாறு, கோட்டூர்புரம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.வேலூர் குடியாத்தம், மேல் ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.கள்ளக்குறிச்சியில், திருக்கோவிலூர், வீரபாண்டி, முகையூர், அரியூர், செட்டிங்தாங்கல், மணம்பூண்டி, அரகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.திருப்பத்தூரில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.விழுப்புரம் மாவட்டம் கானை, கோலியனூர், முண்டியம்பாக்கம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம், ஜானகிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. திருவண்ணாமலையில் வேங்கிக்கால், ஆடையூர், செங்கிப்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.சேலம் மேட்டூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.இதனிடையே, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
மே 08, 2024 20:41

என்னத்தக் கொட்டி என்ன பிரயோஜனம்? இருந்த ஆற்றுமணலை கொள்ளையடிச்சி, இருந்த ஏரி , குட்டைகளை மூடி வூடு கட்டிட்டு, அங்கு இருந்த கெணறுகளையும் மூடியாச்சு. தண்ணியெல்லாம் கடலுக்குப்.போய் சுபம்.


Balakrishnan Kamesh
மே 08, 2024 17:30

வரும் மூன்று நாட்களுக்கு கடலோர உள்மாவட்டங்களின் வெளிப்புறத்திலும் , வெளிமாவட்டத்தின் உட்புறங்களிலும் இங்குமங்குமாகவும் ஆங்காங்காங்கேயும் லேசானது முதல் மிதமாகவும் மிதமானது முதல் லேசாகவும் காற்று அடிக்கும்


Venkatasubramanian krishnamurthy
மே 08, 2024 09:08

எங்கள் குடியாத்தம் நகரில் காலையில் இருந்து இரண்டு மணி நேரங்களுக்கு நல்ல மழை பொழித்தது இப்போதும் வானம் மேக மூட்டத்திலேயே உள்ளது இன்னமும் மழை வேண்டுமென மனம் பேராசைப்படுகிறது


Ramesh Sargam
மே 08, 2024 11:40

பேராசை பேரிழப்பு வேண்டாம் போதும் என்கிற மனமே பொன்செய்யும் மருந்து வேண்டும்


மேலும் செய்திகள்