உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரியில் வெளுத்து வாங்கியது கனமழை; உதவி எண்கள் அறிவிப்பு

நீலகிரியில் வெளுத்து வாங்கியது கனமழை; உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: நீலகிரியில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அக்., 1ம் தேதி முதல் நவ., 3ம் தேதி வரை மழை இயல்பை விட 19% அதிகமாக பெய்திருக்கிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், தற்போது 301.1 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kx2ra5jt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்று மழைக்கு வாய்ப்பு

நீலகிரிகோவை தூத்துக்குடிதிருநெல்வேலிகன்னியாகுமரி தென்காசி திருவாரூர் தஞ்சாவூர் ராமநாதபுரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம்புதுக்கோட்டை சிவகங்கைதிருச்சி நாமக்கல் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் ராணிப்பேட்டைகாஞ்சிபுரம் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ., 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்,

கோவை மாவட்டம்

மேட்டுபாளையம்-30சிறுவாணி-300பெரியநாயக்கன் பாளையம்- 22.8தொண்டாமுத்தூர்-22வால்பாறை- 17 அன்னூர்-9.4

நீலகிரி மாவட்டம்

குன்னூர்-87கோத்தகிரி- 59கோத்தகிரி எஸ்டேட்- 28அவலாஞ்சி-6

மலை ரயில் ரத்து

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.Toll free - 1077,0423-2450034,0423-2450035வாட்ஸ்அப்- +91 9943126000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
நவ 04, 2024 17:53

ஸ்பெயின் நாட்டில் கொட்டித் தீர்த்த மழைக்கு 217 பேர் பலியாகி இருக்கும் சூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மன்னர் மீது சேற்றை வாரியிறைத்து மக்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.???அப்போ நம்மூரில் வெறும் மழை மட்டும் தானா உயிச்சேதம் இல்லையல்லவா பரவாயில்லையே???


P. VENKATESH RAJA
நவ 04, 2024 12:06

நீலகிரியில் கனமழை காரணமாக குளிர் வாட்டி எடுக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை