உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ., 07) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மியான்மர் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0vil2vhj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* சிவகங்கை* மதுரை* திண்டுக்கல்* திருச்சி* பெரம்பலூர்* அரியலூர்* சேலம்* கள்ளக்குறிச்சி* தர்மபுரி* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* கிருஷ்ணகிரிநாளை (நவ., 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திண்டுக்கல்* தேனி* மதுரை* விருதுநகர்* சிவகங்கை* ராமநாதபுரம்நாளை மறுநாள் (நவ., 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாமகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 06, 2025 13:09

அக்டொபேர் நவம்பர் மழை காலம் என்பது அறிந்ததே. வானிலை அறிக்கை பொய்த்தும் போகலாம். மக்கள் விரும்புவது நேற்றுவரை பெய்த மழை முழுவதும் வீணாகாமல் நீர் நிலை நிரம்பிற்றா என்பதும். வானிலை மையம் கூறத்தேவையில்லையென்றாலும் ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை.?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை