உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன., 13, 14, 15 ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; தென் மாவட்டங்களில் பொங்கலன்று மழை எச்சரிக்கை!

ஜன., 13, 14, 15 ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; தென் மாவட்டங்களில் பொங்கலன்று மழை எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (ஜன.,11) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (ஜன.,11) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜன.,12) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன.,13ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. பொங்கல் அன்று ஜனவரி 14ம் தேதி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Durai Kuppusami
ஜன 13, 2025 09:17

தினமலருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்... தங்களின் தொலைக்காட்சி செய்திகள் நன்றாக உள்ளன.. ஆனால் தலைப்பு செய்திகள் தவறான முறையில் உள்ளது... மழை பற்றி செய்தியில் நாட்கள் வருவதற்கு பதில் நாள்கள் வருகிறது இது தவறுதலாக வந்துள்ளது...


R.Subramanian
ஜன 11, 2025 19:29

இப்போது மழை விவசாய மக்களுக்கு நல்லது இல்லை


MARI KUMAR
ஜன 11, 2025 17:18

மழை பொழியட்டும் நாடு செழிக்கட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை