மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
08-Aug-2025
12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
08-Aug-2025
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மட்டும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இன்று முதல் 10ம் தேதி வரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும், 11 மற்றும் 12ம் தேதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்., 7
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும்.செப்., 08
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.செப்.,09
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.செப்.,10
சேலம், நாமக்கல், மதுரை, திருசசி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். செப்.,11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.சென்னையைப் பொறுத்தவரையில் இன்றும், நாளையும் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
08-Aug-2025
08-Aug-2025