உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை; அக்.,16ல் சென்னையை மிரட்டப்போகும் பேய்மழை!!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை; அக்.,16ல் சென்னையை மிரட்டப்போகும் பேய்மழை!!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 17ம் தேதி வரை மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பல இடங்களில் ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=poqwav70&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், இன்று முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று

விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

15ம் தேதி

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், , தஞ்சை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும்.

அக்.,16ம் தேதி ரெட் அலெர்ட்

சென்னை, திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி,பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.

17ம் தேதி

திருவள்ளூர், ராணிப்பேட், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 14, 2024 20:54

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அரசுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மக்களே, பத்திரமாக வீட்டிலேயே தங்கவும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல துறை அமைச்சர்கள் நீங்கள் வெளியே வந்து பாதிக்கப்படப்போகும் இடங்களில் தங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். நீங்களும் வீட்டிலேயே தங்கிவிடவேண்டாம். எப்பொழுதும் செய்வது போல் இந்தமுறையும், எல்லாம் வீபரீதங்களும் ஏட்பட்டபின், வெளியில் வந்து ஒரு போட்டோ சூட் நடத்தி, நிவாரணம் அறிவிக்க முயலாதீர்கள்.


Smba
அக் 14, 2024 15:17

கலரு எல்லாம் செல்லுபடியாகாது மாறலாம் வருண பகவான் தாண்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை