வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த ஆண்டு மழை கொட்டி தீர்க்கும் யாரும் எதிர் பார்க்க வில்லை
Magizhchi
தகவல்களை நேரத்தில் தெரியப்படுத்தவும்
இந்த வருடம் கன மழை கொட்டி தீர்த்து விட்டது போதுமான அளவில் அதன் குளங்கள் ஏரிகள் நிரம்பி விட்டது.
சென்னை: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர் மற்றும் கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து நீடிக்கும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் விடாது கொட்டும் மழை அம்மாவட்டத்தில் இன்று காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலான பதிவான மழை அளவு:விழுப்புரம் - 27.12 செ.மீ.,கக்கனூர் - 25.6 செ.மீ.,அன்னியூர் - 23.64 செ.மீ.,முண்டியம்பாக்கம் - 21.32 செ.மீ.,காணை - 20.32 செ.மீ.,வளவனூர் - 15.84 செ.மீ.,கண்டாச்சிபுரம் - 15.6 செ.மீ.,நங்கத்தூர் - 13 செ.மீ.,வசந்தகிருஷ்ணாபுரம் - 9.6 செ.மீ.,திருவெண்ணைநல்லூர் - 8.8 செ.மீ.,பெண்ணைவலம் -8.28 செ.மீ.,
இந்த ஆண்டு மழை கொட்டி தீர்க்கும் யாரும் எதிர் பார்க்க வில்லை
Magizhchi
தகவல்களை நேரத்தில் தெரியப்படுத்தவும்
இந்த வருடம் கன மழை கொட்டி தீர்த்து விட்டது போதுமான அளவில் அதன் குளங்கள் ஏரிகள் நிரம்பி விட்டது.