உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வார்னிங்

ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வார்னிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பினாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந் நிலையில், மழை பற்றிய முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ளது. அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வரும் 14ம் தேதி, தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எதிரொலியாக 5 நாட்கள் மழை நீடிக்கும்.தமிழகத்தில் நாளை (அக்.14) அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அக்டோபர் 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை (204.மி.மீ) பெய்யக்கூடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே நிருபர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது; சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து பெய்யத் தொடங்கும். நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை விலகி, வரும் 15 மற்றும் 16ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது. இம்முறை 5 நாட்களுக்கு முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தொடங்குகிறது.அரபிக்கடல், வங்கக்கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை தொடரும். மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sri
அக் 14, 2024 12:43

நாங்கள் 100 சென்டிமீட்டர் மழை தாங்குகின்ற அளவுக்கு வடிகால் அமைச்சு இருக்கோம் 20சென்டிமீட்டருகிக்கு எச்சரிக்கை கொடுக்கிராங்க


venugopal s
அக் 14, 2024 11:29

கடந்த மூன்று மாதங்களில் பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத் , உத்தரப்பிரதேசம் ,மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநில அரசுகள் அங்கு பெய்த கனமழையை கையாண்ட விதத்தை விட திறம்படவே தமிழக அரசு கையாளும், கவலைப்பட வேண்டாம்!


Kasimani Baskaran
அக் 14, 2024 06:03

டிராக்டர் தண்ணீரில் மிதந்து மீட்பு நடவடிக்கை எடுக்க உதவும் என்று நினைக்க வேண்டாம். எளிதில் இடுப்பளவு தண்ணீரிலும் இயங்கும் என்ற ஒரே காரணத்துக்காக வாங்கி இருக்கிறார்கள். படகுகள் அனைத்தும் காகித ஓடம் போல இருப்பது ஒருவருக்கும் தெரியாதது துரதிஷ்ட வசமானது. அண்ணாமலை ஊரில் இல்லாத சமயம் மழை பெய்வதால் சென்னைக்கு ஆபத்து அதிகம்.


Kasimani Baskaran
அக் 14, 2024 06:02

டிராக்டர் தண்ணீரில் மிதந்து மீட்பு நடவடிக்கை எடுக்க உதவும் என்று நினைக்க வேண்டாம். எளிதில் இடுப்பளவு தண்ணீரிலும் இயங்கும் என்ற ஒரே காரணத்துக்காக வாங்கி இருக்கிறார்கள். படகுகள் அனைத்தும் காகித ஓடம் போல இருப்பது ஒருவருக்கும் தெரியாதது துரதிஷ்ட வசமானது. அண்ணாமலை ஊரில் இல்லாத சமயம் மழை பெய்வதால் சென்னைக்கு ஆபத்து அதிகம்.


Seshadri Duraiswamy
அக் 14, 2024 05:55

விடியா தீமுகாவுக்கு வாக்களித்த சென்னை மக்கள் நன்றாக அனுபவிப்பார்கள்


INDIAN
அக் 14, 2024 05:53

ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை சென்னையை பொறுத்தவரை அரசு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தியுள்ளது மழைவிட்ட சில மணிநேரங்களிலேயே தண்ணீர் வடிந்துவிடும் , பாஜகவினர் மிக கவனமாக இருக்க வேண்டும், கிடைக்கின்ற சில மணிநேரங்களிலேயே போட் விட்டு போட்டோ சூட் எடுத்துக்கொள்ள வேண்டும் , கடந்த பத்து ஆண்டுகளில் மோடி அரசால் கட்டப்பட்ட எத்தனை பாலங்கள் உடைந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆகவே மழைவரட்டும் அதில் மழைநீர் வடிகால் சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம் அப்படி சரியில்லை என்றால் அரசுமீது அனைவரும் குற்றம் சாட்டுவோம் அதைவிடுத்து ஓநாய்களை, கழுகுகளாய் எப்போது பினம்விழும் தனக்கு இரைகிடைக்கும் என நினைக்கும் கும்பல் இரவோடு இரவாக ஏரிகளை உடைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அரசும் தமிழக மக்களும் கவனமாக இருக்க வேண்டும் . அடுத்தவர்கள் மீது பழிபோட தனது வீட்டுக்கும் , காருக்கும் தீவைக்கும் கேடுகெட்ட கும்பல்கள் இருக்கிறது கவனம் தேவை


Yaro Oruvan
அக் 14, 2024 10:57

200 ஒவாய்க்கு இப்படியா முட்டி போட்டு ......முப்பது வரி கமெண்ட் போடுறது என்னமோ ஒங்க உப்பிஸ்.. வர வர உங்க கடமை உணர்ச்சி பாத்தா புல்லா அரிக்குது


M Ramachandran
அக் 14, 2024 01:47

வசூல் ராஜாக்கள் கொண்டாட்டம் என்றல் கும்மி அடிப்பார்கள்.


Narayanan Sa
அக் 13, 2024 22:55

சென்னை மாவட்ட மக்களுக்கு மட்டும் தான் போட், லொட்டு, லொசுக்கு எல்லாம். மற்ற மாவட்டங்களில் இருப்பவர்கள் மாடல் அரசுக்கு மக்களாக தெரியவில்லையா.


theruvasagan
அக் 13, 2024 22:02

படகெல்லாம் வெளியே எடுத்து தயாரா வைக்கணும். மழை பெய்ய ஆரம்பித்தால் சாலை போக்குவரத்துக்கு ஏதுவாக படகுகளை தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு மாடல் அரசு அறிவுறுத்தல்.


Kumar Kumzi
அக் 13, 2024 20:28

அடடடா மத்திய அரசு தந்த 7500 கோடி ஓவாவுக்கு கணக்கு காட்ட வேண்டியிருக்குமேப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை